கட்சி தேர்தலை உடனே சந்திக்க தயாரா? - சசிகலாவுக்கு ஓ.பி.எஸ் நேரடி சவால்

 
Published : Feb 12, 2017, 09:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
கட்சி தேர்தலை உடனே சந்திக்க தயாரா? - சசிகலாவுக்கு ஓ.பி.எஸ் நேரடி சவால்

சுருக்கம்

இரண்டாவது நாளாக கூவத்தூருக்கு சென்று தனது எம்.எல்.ஏக்களுடன் பேசி போட்டோக்கு போசும் கொடுத்தார் சசிகலா.

பின்னர், மைக் பிடித்து ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார்.

கைதேர்ந்த பேச்சாளர் போன்று சரளமாக பேசி எம்.எல்.ஏக்கள் கைதட்டலை பெற்றார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓ.பி.எஸ் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.

16 ஆண்டுகளாக சசிகலா குடும்பத்தினர் தனக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும், அவர்களால் பல்லாயிரக்கணக்கான அதிமுக பிரமுகர்கள் பாதிக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சசிகலாவுக்கு நேரடி சவால் விடுகிறேன்.

பொதுக்குழுவை கூட்டி தேர்தலை நேரடியாக சந்திக்க தயாரா? என சவால்  விடுத்தார்.

அதுமட்டுமின்றி தேர்தல் ஆணையத்தின் முன்னிலையில் தேர்தல் நடத்தப்படும்.

முடிந்தால் வெற்றி பெற்று காட்டுங்கள் என ஓ.பி.எஸ் ஆவேசத்தோடு சவால் விடுத்தார்.

பொறுமையாக பேசி வந்த சசிகலா இன்று ஆவேசமாக பேசி தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.

அதேபோன்ற மனநிலையில் தான் ஓ.பி.எஸ்சும்  பதற்றத்தோடு பேசினார்.

ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா என இரு தரப்பிலும் என்ன நடக்குமோ என்ற பயம் தொற்றி கொண்டுள்ளது என்பதை நன்றாக காட்டுகிறது.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு