தமிழக சட்டபேரவை கூட்டம் முடிந்ததும் ஓபிஎஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தனியாக சந்தித்து பேசியதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில், இதனை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என ஓபிஎஸ் சவால் விடுத்துள்ளார்.
அதிமுக அதிகார மோதல்
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து அதிமுகவில் இருந்து ஓ பன்னீர் செல்வத்தை நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்துஓபிஎஸ்யை நீக்கி ஆர்பி உதயகுமாரை நியமித்தார். இதற்கான கடிதத்தை சபாநாயகர் அப்பாவுவிடம் வழங்கினார். இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஓபிஎஸ்ம் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார். அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் தான் தான் எனவும் தன்னை கேட்டு தான் அதிமுக தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து கடந்த 3 தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை ஓபிஎஸ்க்கு வழங்கப்பட்டிருந்தது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த இபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து பிரச்சனை எழுப்பினர். இதனையடுத்து சட்டமன்றத்தில் இருந்து அதிமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
இது மட்டும் இருந்திருந்தால் நான் அப்பவே முதலமைச்சர் ஆகியிருப்பேன்...! சரத்குமார் ஆதங்கம்
ஓபிஎஸ்- ஸ்டாலின் ரகசிய சந்திப்பா..?
இதனையடுத்து சபாநாயகரின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீஸ் எடப்பாடி பழனிசாமியை கைது செய்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மூலம் அதிமுகவை முடக்க முதலமைச்சர் ஸ்டாலின் நினைக்கிறார். எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை அங்கீகரிக்கவில்லை என சபாநாயகர் கூறியது ஏன்? என கேள்வி எழுப்பியவர், நேற்று சட்டமன்ற கூட்டம் முடிந்த பிறகு ஸ்டாலினும் ஓபிஎஸ்ஸூம் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அதிமுகவை முடக்க நினைக்கும் ஸ்டாலினின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. ஓபிஎஸ்க்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் செயல்படுவது வெளிப்படையாக தெரிகிறது என கூறியிருந்தார்.
ஓபிஎஸ்ஸுக்கு 71 வயதில் சோதனை.. அடிச்சி நொறுக்கி போராடுவோம்.. அப்பாவுக்காக துடிக்கும் ஓபிஎஸ் மகன்..!
சவால் விடுத்த ஓபிஎஸ்
இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்வதற்காக வந்த முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கையில் என்னை பற்றி ஏதாவது விமர்சனம் வந்தால் கேளுங்கள் பதில் சொல்கிறேன் என தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி நடத்திய நேற்றைய போராட்டம் எனக்கு எதிரானதாக கருதவில்லை என தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலினை தனியாக சந்தித்து பேசியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், முதலமைச்சரை நான் தனியாக சந்தித்ததை பழனிசாமி நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார். நிரூபிக்க வில்லை என்றால் பழனிசாமி விலக தயாரா? என ஓபிஎஸ் சவால் விடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்