
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் ,சேனியம்மன் கோவில் தெரு, கார்ப்பரேஷன் காலனி, வ.உ.சி. நகர் பிரதான சாலை, காந்தி நகர், டி.பி.ஸ்கீம் சாலை உள்பட பல பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
அவருடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஒரு ஆண் குழந்தைக்கு ஜெயலலிதாவின் அப்பா பெயரான ஜெயராம் என்று சூட்டினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்,ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு வாக்காளர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வீதம் கடந்த 2 நாட்களாக வழங்கப்பட்டது.
வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை செய்ததில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும், அந்த ஆவணங்களின் பட்டியல் அனைத்து தொலைக்காட்சிகளிலும் வெளிவந்து கொண்டு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
தினகரன் தரப்பினர் பணத்தை வைத்துக்கொண்டு அலைகிறார்கள். நாங்கள் பாசத்தோடு மக்களை அணுகி கொண்டு இருக்கிறோம் எனவே பாசத்தோடு அணுகும் எங்கனை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என ஓபிஎஸ் தெரிவித்தார்.
டி.டி.வி.தினகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு இருக்கிறார் என்பது பிடிபட்ட ஆவணங்கள் மூலம் நிரூபணம் ஆகி இருக்கிறது எனள தெரிவித்தார்,
தி.மு.க. வாக்காளர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொடுத்து இருக்கிறார்கள். அவர்களையும் வருமான வரித்துறை முறையாக தீவிர புலன்விசாரணை செய்து வெளிக்கொண்டு வந்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.