கும்பகர்ணன் போல் தூங்கும் திமுக...! தட்டி எழுப்பும் அதிமுக...! எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு

By Ajmal Khan  |  First Published Aug 25, 2022, 2:11 PM IST

ஆளும் கட்சியாக திமுக இருந்து வருவதால் வேடந்தாங்கல் பறவை போல் ஆறுகுட்டி தாவி உள்ளதாக  தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, சாதாரண தொண்டர்கள் என்னை சந்திக்கலாம். இனி முதல்வரின் ஸ்டாலின் வீட்டு வாசலைக்கூட ஆறுகுட்டியால் நெருங்க முடியாது கூறினார்.


அதிமுக திட்டங்களை முடக்கும் திமுக

கோவையில் அதிமுக பிரமுகரின் இல்ல நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கோவை வந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அதிமுக ஆட்சியில் கோவை மாவட்டத்திற்கு மாநகராட்சிக்கும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றினோம். திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை முடக்குவதும், ரத்து செய்வதுமாக உள்ளதாக குற்றம்சாட்டினார்.  கோவை மாநகர மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று கடந்த ஆட்சியில் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கான பணிகள் தொடங்கின. 50 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், திமுக குடும்பத்துக்கு நெருக்கமான ரியல் எஸ்டேட் அதிபர், எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வாங்கி குவித்துள்ளதாக கூறினார். எனவே ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை அந்த பகுதிக்கு மாற்றினால், நிலத்தின் மதிப்பு உயரும் என்பதால் பேருந்து நிலையத்தை இடம்மாற்றம் செய்ய திமுக முடிவு செய்துள்ளதாக கூறினார். இதன் காரணமாக  மக்களுடைய வரி பணம் வீணடிக்கப்படுகிறது. வெள்ளலூர் பேருந்து நிலையத்தை மாற்ற முற்பட்டால் மாநகராட்சியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்தார். 

Tap to resize

Latest Videos

சொந்த கட்சியில் அதிகார மோதல்...! கையாலாகாத தனத்தை திசை திருப்ப திமுக மீது குற்றச்சாட்டு- மு.க.ஸ்டாலின் ஆவேசம்

சட்டம் ஒழுங்கு மோசம்

திமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் குழு அமைக்கிறது. இதுவரை 38 குழுக்கள் அமைத்து சரித்திரத்தை படைத்துள்ளது. ஒருவேளை இந்த 38 குழுக்களையும் கண்காணிப்பதற்கும் ஒரு குழு அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.கோவையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு முதலமைச்சர் நடத்திட்ட உதவிகள் வழங்கியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,  ஏற்கெனவே கடந்த ஆட்சியில் பட்டா அளித்தது, கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகள் உள்ளிட்ட பல்வேறு திட்ட பயனாளிகளை அழைத்து வந்து, கோவையில் 1.62 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக தவறான தகவல்களை அளிப்பதாக விமர்சித்தார். அதிமுக ஆட்சியின் போது  மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டது. தற்போது அதை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தவர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்றவில்லை என புகார் கூறினார். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. தற்பொழுது சட்ட ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டதாகவும் குற்றம்சாட்டினார்.  எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் தாராளமாக கிடைக்கிறது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை ரத்து செய்ய கருத்து கேட்பு கூட்டம் நடக்கும் அரசாக இந்த அரசு உள்ளது. இதற்கான தக்க பாடத்தை அடுத்த தேர்தலில் மக்கள் புகட்டுவார்கள் என கூறினார். 

நெருக்கடி கொடுத்து அதிமுகவினரை அபகரிக்கும் திமுக.! ஸ்டாலின் செயல் சர்வாதிகார போக்கின் உச்சம்- ஆர்.பி.உதயகுமார்

ஸ்டாலின் வீட்டு வாசலுக்கு கூட போகமுடியாது

திமுக அரசாங்கம் மக்களை பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல் கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டிருப்பதாக தெரிவித்தவர்,  அதனை நாங்கள் தட்டி எழுப்பிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி திமுகவில் இணைந்தது குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர்,  ஆறு குட்டியை நம்பி அதிமுக கட்சி இல்லை. ஒன்றரை கோடி தொண்டர்களை நம்பித்தான் அதிமுக செயல்பட்டுக் கொண்டிருப்பதாக கூறினார். தற்பொழுது ஆளும் கட்சியாக திமுக இருந்து வருவதால் வேடந்தாங்கல் பறவை போல் அவர் தாவி உள்ளதாக  கூறினார். சாதாரண தொண்டர்கள் என்னை சந்திக்கலாம். இனி முதல்வரின் ஸ்டாலின் வீட்டு வாசலைக்கூட ஆறுகுட்டியால் நெருங்க முடியாது என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

வந்தாரை வாழவைக்கும் திருப்பூர்.!ஒரே ஆண்டில் 4 முறை வந்துவிட்டேன்.. மீண்டும் வருவேன் ஏன் தெரியும்-மு.க.ஸ்டாலின்

click me!