கலெக்டர் ஆபீஸ் கடை ஒதுக்கீட்டில் செம்ம கலெக்ஷன்.?? அமைச்சர் அன்பரசன் கை காட்டியவர்களுக்கே கடை.. செம்ம உள்ளடி.

By Ezhilarasan BabuFirst Published Aug 25, 2022, 2:06 PM IST
Highlights

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைய உள்ள கடைகள் அமைச்சர் தா,மோ அன்பரசன் கைகாட்டும் நபர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைய உள்ள கடைகள் அமைச்சர் தா,மோ அன்பரசன் கைகாட்டும் நபர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலுள்ள ஒவ்வொரு கடைகளுக்கும் ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்து கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.எப்படியாவது கடையை பெற வேண்டுமென கட்சிக்குள்ளாக முயற்சித்து வந்தவர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளது தெரிகிறது. 

திமுக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக இருந்து வருபவர் அமைச்சர் தா.மோ அன்பரசன், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று தமிழக சிறு மற்றும் குறு தொழில் துறை அமைச்சராக இருந்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் யார் ஒருவர் எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் அது அமைச்சரின் கடைக்கண்பார்வை படாமல் நடக்காது என்ற நிலைதான் இருந்து வருகிறது.

இந்நிலையில் தான் கடந்த அதிமுக ஆட்சியில் காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது  செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவானது, செங்கல்பட்டுக்கென தனி ஆட்சியர் அலுவலகம்  அமைப்பதற்கான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இதையும் படியுங்கள்:  வந்தாரை வாழவைக்கும் திருப்பூர்.!ஒரே ஆண்டில் 4 முறை வந்துவிட்டேன்.. மீண்டும் வருவேன் ஏன் தெரியும்-மு.க.ஸ்டாலின்

தற்போது ஆட்சியர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு அது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது,  95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன, டைல்ஸ் ஒட்டுவது, டச்சிங் ஒர்க் பார்ப்பது, பெயின்ட் அடிப்பது போன்ற பணிகளே எஞ்சியுள்ளன. அதேபோல் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் கடைகள், உணவகங்கள், கட்டப்பட்டு வருகின்றன, அந்த கடைகளை வாடகைக்கு பெறுவதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய அரசியல் புள்ளிகள் முட்டி மோதி வருகின்றனர், எவ்வளவு தொகை கொடுத்தாவது கடைகளை எடுத்துவிட வேண்டும் என பலர் அமைச்சர் தரப்பை அணுகி வந்துள்ளனர்,

இதையும் படியுங்கள்: அண்ணா பல்கலைகழகத்தில் இந்த கொடுமையா..! திமுக அரசு செய்யும் பச்சை துரோகம்.. டார் டாரா கிழிக்கும் சீமான்.

ஆனால் கடைகளை ஒதுக்குவதில் அரசு தரப்பில் சில விதிமுறைகள் உள்ளன, ஊனமுற்றோர், பார்வையற்றோர்,  சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது விதி, ஆனால் அதன்படி கடைகள் வழங்கப்பட்டால் அரசியல் புள்ளிகளுக்கு அதில் வாய்ப்பு கிடைக்காது, எனவே பெயர் அளவுக்கு அது போன்றவர்களுக்கு ஒதுக்கிவிட்டு அதிகாரம் படைத்தவர்கள் அதை அனுபவிக்கும் வகையில் நிலைமைகள் இருந்து வருகிறது, இந்நிலையில்தான் கடைகளை ஒதுக்குவதில்  தா.மோ அன்பரசன் யாருக்கு கொடுக்க வேண்டுமென கை நீட்டினாரோ அவர்களுக்குத்தான் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

செங்கல்பட்டு திமுக நகர செயலாளர் நரேந்திரன் சொன்னபடி யாரெல்லாம்  கேட்டார்களோ அவர்களுக்குத்தான் கடை ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது, கடை ஒதுக்கியதில்  வெளிப்படைத்தன்மை இல்லை பலரும் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர், தங்களுக்கு தேவைப்படுபவர் களுக்கு கடைக்கு இவ்வளவு தொகை என நிர்ணயித்து கடை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற புகாரும் இருந்து வருகிறது.  சிறிய சிபாரிசுக்கு சென்றாலும் கூட அமைச்சர்  அந்த மீட்டிங்கிற்கு பந்தல் செலவை ஏற்றுக் கொள், கட்சிக்கு அதை செய் இதை செய் என வருபவர்களிடம் ரவுண்டாக ஒரு அமௌன்ட்  கட்டிங் போட்டு விடுவது வழக்கமாக வைத்துள்ளதாகவும், அதுபோல கடை விவகாரத்திலும் பணம் விளையாடி உள்ளது என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.  
 

click me!