மோடியுடன் உரையாட பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு. தேர்வு பயத்தை நீக்கும் பரிக்ஷா பெ சார்ச்சா-2021 அறிவிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Feb 18, 2021, 12:50 PM IST
Highlights

இந்தத் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் தேர்வை அச்சமின்றியும், பதற்றம் இன்றியும் எழுதவும், அவர்களுக்கு ஊக்கம் தரும் நிகழ்ச்சிகள் அரசின் சார்பிலும் தனியார் சார்பிலும் நடத்தப்படுகின்றன. 

நாடு முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு சந்திக்க உள்ள நிலையில், அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டவும், தேர்வு பயத்திலிருந்து அவர்கள் வெளிகொணரும் வகையிலும் பாரத பிரதமர் மோடி  ‘பரிக்ஷா பெ சார்ச்சா 2021  என்ற நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களுடன் கலந்துரையாடவுள்ளார். அதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் தேர்வு செய்வதற்கான நடைமுறை தற்போது தொடங்கியுள்ளது.‘பரிக்ஷா பெ சார்ச்சா என்ற பெயரில் 2018-ஆம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். இது நான்காவது ஆண்டாக நடைபெற உள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி  ஆண்டுதோறும் அவர்களுடன் உரையாடி வருகிறார், ஒவ்வொரு மாநிலங்களிலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 

இந்தத் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் தேர்வை அச்சமின்றியும், பதற்றம் இன்றியும் எழுதவும், அவர்களுக்கு ஊக்கம் தரும் நிகழ்ச்சிகள் அரசின் சார்பிலும் தனியார் சார்பிலும் நடத்தப்படுகின்றன. இந்த அடிப்படையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி ஆண்டுதோறும் அவர்களுடன் உரையாடி வருகிறார். அதில் மாணவர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்கிறார், இதற்காக பிரதமரிடம் கேள்வி கேட்கும் மாணவர்கள் தனியாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த நிகழ்ச்சி டிவி மற்றும் சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுமார் 2.6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர், அதில் மொத்தம் 2000 மாணவர்கள் வெற்றி பெற்று பிரதமருடன் உரையாடினார்.அதில் தமிழகத்தில் 66 மாணவர்கள் இடம் பெற்றிருந்தனர். 

இந்நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறை தொடங்கியுள்ளது. ‘பரிக்ஷா பெ சார்ச்சா 2021 என்ற பெயரில் மத்திய கல்வி அமைச்சகம் போர்டெல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் போர்டெலில் மாணவர்களுக்கு சில போட்டிகள் நடத்தப்படும், அதில் வெற்றி பெறுபவர்கள் பிரதமர்  மோடியுடன் உரையாடுவதற்கான வாய்ப்பை பெற உள்ளனர். இதில் மாணவர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம், அவற்றை நேரடியாக நாட்டின் பிரதமரிடம் முன்வைக்கவும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. 

9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி  மாணவர்கள் இந்த போட்டியில் பங்கு பெறலாம், மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட எந்த ஒரு கான்செப்டிலும் தங்கள் பதில்களை சமர்ப்பிக்கலாம். அவர்கள் தங்கள் கேள்வியை மாண்புமிகு  பிரதமரிடம் அதிகபட்சமாக 500 எழுத்துக்களுக்குள் சமர்ப்பிக்கலாம், மேலும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களுக்கான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஆன்லைன் மூலம் இதில் பங்கேற்று தங்களது கருத்துக்களை  சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!