கொஞ்சம் பார்த்து பேசு தம்பி... என் அரசியல் அனுபவம் தான் உன் வயசு... உதயநிதியை எச்சரித்த எடப்பாடியார்..!

By vinoth kumar  |  First Published Feb 18, 2021, 12:35 PM IST

அதிமுக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என மு.க.ஸ்டாலின் பச்சை பொய் சொல்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 


அதிமுக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என மு.க.ஸ்டாலின் பச்சை பொய் சொல்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசுகையில்;- திமுக  ஆட்சியையும் கடந்த 2011 முதல் 2021 வரை நடந்த அதிமுக ஆட்சியையும் ஒப்பிட்டு பாருங்கள். அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டும் என்றே திட்டமிட்டு விமர்சனம் செய்து வருகிறார். ராதாபுரம் தொகுதியில் ஏராளமான திட்டங்கள் செய்து முடிக்கப்பட்டு உள்ளது. அதிகாரத்தில் இருந்தபோது மக்கள் பிரச்சனைகளை தீர்க்க தவறிய ஒரேகட்சி திமுக என விமர்சித்தார்.

Latest Videos

undefined

மேலும், சட்டம் ஒழுங்கை பேணி பாதுகாப்பதன் மூலம் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. கடந்த காலங்களில் அரசு பள்ளிகளில் பயின்ற 6 பேருக்கு தான் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால், 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு கொண்டு வந்த காரணத்தினால் இந்த ஆண்டு 435 பேர் பல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கான கல்வி கட்டணத்தையும் அரசே ஏற்றுள்ளது. அதிமுக அரசு 7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து மாணவ- மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கி உள்ளது.

எனது அனுபவ வயதுதான் உதயநிதிக்கு என்றும், அதிமுகவை விமர்சிக்க அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார். திமுகவில் குடும்பத்தை தவிர்த்து வேறு எவரும் பிரச்சாரத்திற்கு செல்வதில்லை என்றும் குற்றம் சாட்டினார். அரசு அதிகாரியைத் தேடி மக்கள் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறிய முதலமைச்சர் 1100 ல் புகார் அளிக்கலாம் என்றும், தமிழக அரசுக்கு இதுவரை 55 ஆயிரம் புகார்கள் வந்திருப்பதாகவும், அதிமுக அரசு நிச்சயம்  அதை நிறைவேற்றுவோம் எனவும் உறுதியளித்தார். இதனால், ஸ்டாலின் பெட்டி வைத்து மனு வாங்க வேண்டிய அவசியம் இனி இல்லை. திமுகவினருக்கு கொடுத்து பழக்கம் இல்லை எடுத்து பழக்கபட்டவர்கள் அவர்கள் என்றும் அப்போது குற்றம் சாட்டினார்.

click me!