ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதங்களுக்கு செயல்படும்... தமிழக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய ரெடி..!

By Thiraviaraj RMFirst Published Apr 26, 2021, 12:04 PM IST
Highlights

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்க அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்க அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை அரசே கைப்பற்றி இயக்கலாமா? அல்லது வேதாந்தா நிறுவனத்திற்கு தற்காலிக அனுமதி வழங்கலாமா என்பது குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் , தேமுதிக, பா.ம.க உள்ளிட்ட 8 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அந்த கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்க அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 மாதங்களுக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்கலாம் என அரசு அதிகாரிகள் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உள்ளது.

click me!