ரெம்டெசிவருக்காக பறிதவிக்கும் மக்கள்.. காரணம் என்ன..? மருத்துவ நிபுணரின் அதிர்ச்சி தகவல்..

By Ezhilarasan BabuFirst Published Apr 26, 2021, 11:44 AM IST
Highlights

கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், அந்த வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகளின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது.அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தனது உறவினர்களை காப்பாற்ற அவரது சொந்த பந்தங்கள் கொரோனா தடுப்பு மருந்துக்காக குறிப்பாக ரெம்டெசிவர் மருந்துக்காக ஒரு எல்லை முதல் இன்னொரு எல்லைக்கே ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், அந்த வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகளின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தனது உறவினர்களை காப்பாற்ற அவரது சொந்த பந்தங்கள் கொரோனா தடுப்பு  மருந்துக்காக குறிப்பாக ' ரெம்டெசிவர் ' மருந்துக்காக ஒரு எல்லை முதல் இன்னொரு எல்லைக்கே ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஒரு டோஸ் மருந்துக்காக கள்ளச்சந்தைகளில் அதிக விலைக்கு மருந்துகளுக்காக கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அப்படிப்பட்ட இந்த ரெம்டெசிவர் மருந்து உண்மையிலேயே கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்துகிறதா.? அதனுடைய செயல்பாடுகள் என்ன என்பது குறித்து செயின்ட் ஜான் மருத்துவமனை கல்லூரி டீன் மற்றும் நுரையீரல் நிபுணர் டாக்டர் ஜார்ஜ் டிசோசா அவர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணலில், அவர் கூறியதாவது: 

கொரோனா இரண்டாவது அலை மிக மோசமாக உள்ளது. குறிப்பாக ரெம்டெசிவர் மருந்து என்பது கொரோனா வைரஸை குணப்படுத்துவதற்கான மருந்து அல்ல. ஆனால் அது கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் மரணத்தை கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது. அதேபோல் கொரோனா வைரசின் ஆயுட்காலத்தை அது குறைப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அது கொரோனா வைரசை முற்றிலுமாக அழிக்கிறது என்றால் அது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த மருந்தின் செயல் திறனை உறுதி செய்யும் வகையில் ஆய்வு முடிவுகள் இல்லை. ஆனால் ஒன்றை மட்டும் கூற முடியும் ரெம்டெசிவர் கொரோனா வைரஸ் நோயின் தன்மையை குறைக்கும் நல்ல மருந்து, ஆனால் இது வைரசை குணப்படுத்தும் மருந்து அல்ல.

1. ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாட்டிற்கான காரணம் என்ன.?

கொரோனா வைரஸ் தொற்று என்பது எதிர் பாராத வகையில் திடீரென அதிகமான எண்ணிக்கையில் உயர்ந்ததே இதற்கு காரணம். ரெம்டெசிவர்  மருந்து நோயின் எண்ணிக்கைக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படவில்லை, யாரும் எதிர்பார்க்காத வகையில் நோயின் தாக்கம் திடீரென அதிகரித்தது. அதேபோல் இரண்டாவது அலையில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட பயம் இதற்கு முக்கிய காரணம், அந்த பயத்தை பயன்படுத்திக் கொண்டு சிலர் அந்த மருந்தை பதுக்கியதே மருந்து தட்டுப்பாடுக்கு காரணம். 

2. ரெம்டெசிவர் எவ்வாறு செயல்படுகிறது.? 

ரெம்டெசிவர் மருந்து கொரோனா வைரஸ் உடலில் பரவுவதைத் தடுக்கிறது. வைரஸ் உள்ளே நுழைந்தவுடன் பிரதி எடுத்து பன்மடங்காக பரவுகிறது, இந்த மருந்து அதன் பரவலை கட்டுப்படுத்துகிறது. உடலில் நோயின் தாக்கத்தை குறைத்து பாதிப்பின் நேரத்தை குறைக்கிறது. 

3. இந்த மருதை எப்படி பயன்படுத்த வேண்டும்.? 

ரெம்டெசிவர் குப்பியில் மொத்தம் 200 மில்லி கிராம் இருக்கும். அதில் முதல்  ஐந்து நாளைக்கு 100 கிராம் ஒரு முறையும் மற்றொரு 100 கிராம் பத்தாவது நாளும் செலுத்தப்பட வேண்டும். நோயின் தன்மைக்கு ஏற்ப அதன் அளவு இருக்கும். 

4.ரெம்டெசிவரின் பக்கவிளைவுகள் என்ன.?

ரெம்டெசிவர் என்பது நன்கு செயலாற்றக் கூடிய ஒரு மருந்து. இந்த மருந்தை செலுத்துவதன் மூலம் சில நோயாளிகளுக்கு காய்ச்சல் வரக்கூடும், அதன் முக்கிய பக்கவிளைவாக கல்லீரல் அழற்சி ஏற்படுகிறது,  மிகவும் அரிதாக எப்போதாவது ரத்த அழுத்த உயர்வு மற்றும் தாழ்வு ஏற்படக்கூடும். குறிப்பாக கல்லீரல் நோயால்  பாதிக்கப்பட்டவர்கள் இந்த மருந்தை தவிர்ப்பது அவசியம். 


5. ஏன் உலக சுகாதார நிறுவனம் இன்னும் ரெம்டெசிவரை மக்கள் பயன்பாட்டிற்கு பரிந்துரை செய்யவில்லை. ஆனாலும் அது ஏன் இன்னும் பயன்படுத்தப்படுகிறது.? 

ரெம்டெசிவர் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகள் ரெம்டெசிவர் சிகிச்சைக்கான மருந்து அல்ல என்றும், அதனால் எந்த தாக்கமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளன. ஆனால் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் இந்த மருந்தை பயன்படுத்துவதன் மூலம் உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுகிறது என கூறியுள்ளது. ஆனாலும் அதன் செயல் திறனுக்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை இல்லை. அது ஒரு சிறந்த துணை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார். ரெம்டெசிவர் மருந்துக்கான மாற்று மருந்துகள் உள்ளதா.? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், இல்லை எனவும், கொரோனாவுக்கு எதிராக செறிவூட்டப்பட்ட ரெம்டெசிவர் போன்ற மருந்து பயனுள்ளதாக இருக்கிறது என கூறியுள்ளார். 
 

click me!