மீனவர்கள் கைதுக்கு முற்றுப்புள்ளி தேவை: ஓ.பி.எஸ். வேண்டுகோள்

 
Published : Jul 09, 2017, 05:26 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
மீனவர்கள் கைதுக்கு முற்றுப்புள்ளி தேவை: ஓ.பி.எஸ். வேண்டுகோள்

சுருக்கம்

o.panner selvam against fisherman arrest

தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையின் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

அண்மைக் காலமாக தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி வருவதாகக் கூறி, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர். 

முன்னதாக, கடந்த 4 தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டது குறிப்படத்தக்கது. 

இந்தநிலையில் எல்லைத்தாண்டும் மீனவர்களுக்கு அபராதமும், சிறை தண்டனையும் நிறைவேற்றும் வகையில் இலங்கை நாடாளுமன்றத்தல் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையின் இந்த முடிவை தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று இலங்கை சென்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இலங்கையின் புதிய சட்டத்தை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையின் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழக மீனவர்கள் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு, பாரம்பரிய பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையைக் காப்பாற்றித் தர வேண்டும் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினர் தாங்கள் செய்யும் தவறுகளை மறைக்க தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டுவதாக கூறுகின்றனர் என்றும் ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்