காமராஜர் ஆட்சியை காமராஜர் மட்டுமே தர முடியும்.. அன்புமணி ராமதாஸ் அதிரடி..!

By vinoth kumarFirst Published Sep 26, 2022, 4:13 PM IST
Highlights

அனைத்து சாதியும் முன்னேற வேண்டும் என்பதே  நோக்கம். ஒவ்வொரு சாதிக்கும் ஒரு அடையாளம் உண்டு. ஆனால் சாதி பெயரில் இருக்கும் அடக்குமுறையை ஏற்று கொள்ள முடியாது. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. வன்னியர், நாடார், மீனவர் போன்ற சமுதாயங்கள் காலங்காலமாக ஒடுக்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு சாதிக்கும் ஒரு அடையாளம் உண்டு. ஆனால் சாதி பெயரில் இருக்கும் அடக்குமுறையை ஏற்று கொள்ள முடியாது என சுயமரியாதை மாநாட்டில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். 

சுயமரியாதை மாநாட்டின் தலைவராக இருந்த ஊ.ப.சௌந்திரபாண்டியன் நாடார்  சமூகத்தின் நலனுக்காக மட்டுமின்றி தலித்துக்கள் போன்ற பிற சமுதாய மக்களின்  முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தவர். அப்படிப்பட்ட  ஊ.ப.சௌந்திரபாண்டியனின் பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக சென்னை சைதாப்பேட்டையில் நாடார் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. அன்னை வேளாங்கண்ணி பெண்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், சிறப்பு விருந்தினராக பாமக தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸை, பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளரும், கவிஞருமான ம. திலகபாமா பாராட்டி வாழ்த்தினார். 

இதையும் படிங்க;- அடுத்து என்ன நிகழுமோ? அச்சத்தில் தமிழக மக்கள்.. கவலையில் ராமதாஸ்..!

தொடர்ந்து மாநாட்டில் சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். தொடர்ந்து  சிறந்த  130 நாடார் சங்கங்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். இதனையடுத்து, அன்புமணி ராமதாஸ் பேசுகையில்;-  சாதியால் ஏதேனும் ஒரு வகையில் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அனைத்து சாதியும் முன்னேற வேண்டும் என்பதே  நோக்கம். ஒவ்வொரு சாதிக்கும் ஒரு அடையாளம் உண்டு. ஆனால் சாதி பெயரில் இருக்கும் அடக்குமுறையை ஏற்று கொள்ள முடியாது. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. வன்னியர், நாடார், மீனவர் போன்ற சமுதாயங்கள் காலங்காலமாக ஒடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அனைத்து சமுதாயமும் முன்னேற வேண்டும். மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கங்களை இணைக்கும் விதமாக நடைபெற்ற சமூகநீதி போராட்டத்தில் 21 உயிர்கள் இழந்தோம். அதன் பலனாய் 108 பேருக்கு இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பு கிடைத்தது என்றார்.

நாங்கள் காமராசர் ஆட்சியை கொண்டு வருவோம் என தற்பொழுது உள்ள கட்சிகள் கூறலாம் ஆனால், காமராசரை போல் யாராலும் ஆட்சி செய்ய முடியாது. காமராசர் குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் தலைவர் இல்லை. அவர்  இந்தியாவுக்கு தலைவர். காமராசர் கல்விக்கு வித்திட்டவர். அந்த வகையில் நாடார் சமுதாயம் கல்வியில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக பள்ளிகளை திறந்தவர்கள் நாடார் சமூகத்தினர். நாடார் சமூகத்திற்கு என அரசியல் வரலாறு இல்லை. நாடார் சமுதாயத்திற்கு, கல்வி, வணிகம், ஆன்மீகம் உள்ளிட்டவற்றில் வரலாறு உண்டு. தமிழக அரசோ 10 லட்சம் பேருக்கு தான் அரசு வேலை உண்டு. ஆனால், நாடார் சமுதாயம் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்தது. இப்படிப்பட்ட வரலாறு மறுக்கப்படுகிறது. சத்திரியர்கள் ஒன்று சேர வேண்டும். அதற்கான நேரமும், காலமும் வந்து விட்டது. தமிழகத்தில் மீண்டும் காமராசர் ஆட்சியை கொண்டு வருவோம் என்றார். பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியன் நாடாரின் தபால் தலை வெளியிடப்பட்டது. பாமக தலைவர் தபால் தலையை வெளியிட, அதை முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பெற்றுக் கொண்டார்.

நாடார் சங்கத்தின் தீர்மானங்கள்

* ஜாதி வாரியாக கணக்கெடுத்து  வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு 

*  சென்னை முதல் கன்னியாகுமரி வரை 4வழி ரயில் பாதை அமைக்க வேண்டும்

*  சென்னை - கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை ரயில் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்

*  மதுக்கடைகளை இழுத்து மூட வேண்டும், குட்கா விற்பனையாளர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்

*  சமூக நிதி உழைப்பாளர்களுக்கு சுந்தரபாண்டியன் நாடார் பெயரில் விருது வழங்க வேண்டும்

* மதுரை விமான நிலையத்தின் பெயரை  கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கேடிகே தங்கமணி நாடார் என    மாற்ற வேண்டும்

*  கலப்பட கருப்பட்டி விற்பனையாளர்களை தேசிய சடத்தில் கைது செய்ய வேண்டும்

*  தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சி.ப.ஆதித்தனார் பெயதை சூட்ட வேண்டும்

* ராமதாசுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரப்படுத்த வேண்டும்

* பரந்தூர் விமான நிலைய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

* அரசு பள்ளிகளில் பாரம்பரிய சிலம்பக்கலையை ஊக்குவிக்க சிலம்பம் ஆசான்களை பணி நியமனம் செய்ய வேண்டும்

இந்த விழாவில், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.என்.ராஜா, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் ஜெய்சுவால், அன்னை வேளாங்கண்ணி கல்வி குழுமம் தலைவர் எஸ்.தேவராஜ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இதையும் படிங்க;- அன்று பாமக முறியடித்தது, இன்றும் கூட நிற்கிறது.. தமிழக அரசு இதை செய்தே ஆகணும் - கட்டளை போட்ட ராமதாஸ் !

click me!