‘ஓசி பஸ்ஸில் பயணம் செய்கிறார்களா பெண்கள்.. இதுதான் திராவிட மாடலா? கொந்தளிக்கும் டிடிவி தினகரன்!

Published : Sep 26, 2022, 03:15 PM IST
‘ஓசி பஸ்ஸில் பயணம் செய்கிறார்களா பெண்கள்.. இதுதான் திராவிட மாடலா? கொந்தளிக்கும் டிடிவி தினகரன்!

சுருக்கம்

விழா ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி, ‘இப்போ பஸ்ல எப்டி போறீங்க ? இங்க இருந்து எங்க போக வேணும்னாலும் ஓசி. ஓசி பஸ்ல போறீங்க. கோயம்பேடு போகவேண்டும் என்றால் ஓசி பேருந்தில்தான் செல்கிறீர்கள்’ என்று பேசினார்.

அரசு பேருந்துகளில் பெண்கள் ஓசியில்தானே செல்கிறீர்கள் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விழா ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி, ‘இப்போ பஸ்ல எப்படி போறீங்க ? இங்க இருந்து எங்க போக வேணும்னாலும் ஓசி. ஓசி பஸ்ல போறீங்க. கோயம்பேடு போகவேண்டும் என்றால் ஓசி பேருந்தில்தான் செல்கிறீர்கள்’ என்று பேசினார்.

அமைச்சர் பொன்முடி பேசிய இந்த வீடியோ  சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமைச்சரின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டரில் பதிவு ஒன்றினை வெளியிட்டு உள்ளார்.

இதையும் படிங்க..வீட்டு காவலில் சீனா அதிபர் ஜி ஜின்பிங்.. ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் - உண்மையில் சீனாவில் என்ன நடக்கிறது ?

அதில், ‘அரசு விழாவில் பங்கேற்ற பெண்களைப் பார்த்து ‘ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்’ என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியிருப்பதாக வெளியாகியுள்ள காணொளி அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சரின் இந்தப் பேச்சு கண்டனத்திற்குரியது. பெண்கள் இலவசமாக அரசுப் பேருந்தில் பயணிக்கும்போது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், அவர்களை ஏளனமாக பேசக்கூடாது என முதலமைச்சர் திரு.ஸ்டாலின் கூறியிருந்தார்.

இது அவர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? அமைச்சர்களுக்குப் பொருந்தாதா ? மூத்த அமைச்சர் ஒருவரே இப்படி பேசுகிறார் என்றால் திமுகவினரின் உண்மையான மனநிலை எது என்பதை நம்மால் உணர முடிகிறது. பெண்களை இப்படி இழிவுபடுத்துவதும் தி.மு.க.வினர் கண்டுபிடித்திருக்கும் திராவிட மாடலின் அங்கம்தானோ ? என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க..‘ஊழலை நிரூபிச்சு காட்டுங்க பிடிஆர்.. அரசியலில் இருந்து விலக தயார்’ - மாஸ் காட்டிய செல்லூர் ராஜு !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்
TVK Cabinet: விஜய் அமைச்சரவை பட்டியல்: நிதி அமைச்சர் செங்கோட்டையன்! ஆதவ் அர்ஜுனா, ஆனந்துக்கு என்ன துறை?