திமுக ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி... பகீர் கிளப்பும் கூட்டணி கட்சி தலைவர்..!

By vinoth kumar  |  First Published Sep 26, 2022, 3:08 PM IST

திமுகவை சேர்ந்த ஆ.ராசா எம்.பி. சனாதனம் குறித்து பேசியதை இந்து மதத்தை பற்றி இழிவாக பேசியதாக கூறி தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது. ஆனால் மத்திய அரசின் சிபிஎஸ்இ 6-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் சனாதனம் பற்றி உள்ளது.


காந்தியை சுட்டுக்கொன்ற அமைப்பை சேர்ந்தவர்களுக்கு அக்டோபர் 2-ம் தேதி பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது கவலை அளிக்கிறது என முத்தரசன் கூறியுள்ளார். 

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தததியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- திமுகவை சேர்ந்த ஆ.ராசா எம்.பி. சனாதனம் குறித்து பேசியதை இந்து மதத்தை பற்றி இழிவாக பேசியதாக கூறி தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது. ஆனால் மத்திய அரசின் சிபிஎஸ்இ 6-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் சனாதனம் பற்றி உள்ளது. அதில், மேல் ஜாதி, கீழ்ஜாதி என்று புகைப்படத்தோடு விளக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

Tap to resize

Latest Videos

பிஎஃப்ஐ அமைப்பு மீது எந்த அடிப்படையில் சோதனை நடக்கிறது மற்றும் என்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பதை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. அதை பயன்படுத்தி திமுக ஆட்சியை கவிழ்க்கவும் பாஜக சதி செய்கிறது என முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். 

கோவை உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்த இடங்களில் சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தில் காலம் தாழ்த்தாமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். காந்தியை சுட்டுக்கொன்ற அமைப்பை சேர்ந்தவர்களுக்கு அக்டோபர் 2-ம் தேதி பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது கவலை அளிக்கிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

click me!