இன்னும் 4 ஆண்டுகள்தான்.. தமிழகத்தில் என்னுடைய ஆட்சி.. சீமான் தாறுமாறு கணிப்பு..!

By Asianet TamilFirst Published Jul 25, 2022, 9:29 PM IST
Highlights

அதிகபட்சமாக இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில் தமிழகத்தில் நான்தான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்று தெரிவித்துள்ளார். 

தமிழ் தேச தன்னுரிமை கட்சியின் சார்பில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தமிழக மக்கள் தன்னாட்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தெற்காசியா முழுதுமே பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள். இதை ஆய்வறிக்கைகள் தெளிவாகச் சொல்கிறது. நம்முடைய தமிழ் முன்னோர்கள் வைத்திருந்த வாளை இப்போது  நம்மாள் தூக்கக் கூட முடியாது. ஆனால், அந்தக் காலத்தில் தமிழ் முன்னோர்கள் வாளைத் தூக்கி குதிரை மேல் நின்று வீசியிருக்கிறார்கள். 

இதையும் படிங்க: மகளிருக்கு மாதம் ரூ.1,000 எப்போது கிடைக்கும் ? சரமாரி கேள்வி எழுப்பிய மநீம.!

பீட்சா, பர்கர் எல்லாம் சாப்பிடும் நம்மால் இன்று அதனை தூக்கக் கூட முடியாது. தமிழனுடைய அறிவு என்பது நெற்களஞ்சியம் போல்  உலகம் முழுவதுமே கொட்டி கிடக்கிறது. தமிழில் எழுதி வைத்த பாக்களை படித்து பார்த்து அதிலிருந்து திட்டம் போட்டால் நாடு நலமாக இருக்கும். தற்போது தமிழக அரசுக்கு ரூபாய் 6 லட்சம் கோடி கடன் உள்ளது. இந்த அளவுக்குக் கடன் இருக்கும் போது ரூபாய் 80 கோடியில் பேனா வைக்க திட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் அதிகாரமும் இல்லை. அங்கு தற்போது அரசும் இல்லை. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி வந்ததாக கேரள மீனவர்கள் ஒருவர்கூட இதுவரை கைது செய்யப்பட்டது கிடையாது. 

இதையும் படிங்க: இனி இவர்தான் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்..! ஓபிஎஸ் வலையில் சிக்கிய எடப்பாடி பழனிசாமி

அதற்கு காரணம் கேரள ஆட்சியாளர்கள் அந்த மண்ணைச் சார்ந்தவர்கள். ஆனால், தமிழகத்தை வெளியே இருந்து வந்தவர்களே ஆட்சி செய்கிறார்கள். அதனால்தான் இந்த மண்ணை சேர்ந்த 2 பேர் அடிமையாகி இருக்கிறார்கள். பெருந்தலைவர் காமராஜர் பல்லாயிரம் படிப்பகங்களை திறந்து படிக்க வைத்தார். ஆனால், திராவிட மாடல் பல்லாயிரம் குடிப்பகங்களைத்தான் திறந்து வைத்து குடிக்க வைக்கிறது. நீரை தேக்கிவைக்க பல வழிகள் இருக்கின்றன. ஆனால், அதை செய்யாமல் ரூபாய் 50 ஆயிரம் கோடி செலவு செய்து கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை அமைக்க இருக்கிறார்கள். அதிகபட்சமாக இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில் தமிழகத்தில் நான்தான். தமிழகத்தில் இருந்து கிடைக்கும் எல்லா வளமும் நமக்குத்தான்.” என்று சீமான் பேசினார்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கு தேர்தல்...! திமுகவை அலறவிடும் அதிமுக மாஜி அமைச்சர்

click me!