பிரபுவின் கதை தான் வேதனையான எடுத்துக்காட்டு.. எதுக்கு தடை செய்ய தயங்குறீங்க.. ராமதாஸ் காட்டமான கேள்வி.!

By vinoth kumar  |  First Published Jul 29, 2022, 6:36 AM IST

ஆன்லைன் சூதாட்டத்தடை நீக்கப்பட்ட பின்னர் கடந்த ஓராண்டில் நிகழும் 27ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என அரசு அறிவித்த பிறகு நிகழ்ந்த 4ஆவது தற்கொலை இது. 


ஆன்லைன் சூதாட்டத்தடை நீக்கப்பட்ட பின்னர் கடந்த ஓராண்டில் நிகழும் 27ஆவது தற்கொலை இதுவாகும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த முத்தானுாரை சேர்ந்தவர் பிரபு (36). தனியார் கிரானைட்ஸ் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பிரமிளா(32). இந்த தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் காட்டிய பிரபு அதற்கு அடிமையாகி பல லட்சம் ரூபாயை இழந்து கடன் கழுத்தை நெறித்தது. இதனிடையே, மேலும், பிரபுவுக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கமும் இருந்துள்ளது. இந்நிலையில், பணத்தை இழந்த வேதனையில் நேற்று மாலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு இன்னும் தயங்குவது ஏன்? ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- சீமான் உன் தம்பிகளை வரச் சொல்லு.. தனியா நின்று பாக்கலாம் வா.?? பாமக Ex MLA கணேஷ்குமார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஆன்லைன் சூதாட்டம் மற்றும் தடை செய்யப்பட்ட கேரள பரிசுச்சீட்டில் ரூ.18 லட்சத்தை இழந்த தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த முத்தானூரை சேர்ந்த பிரபு என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலும், அனுதாபங்களும்.

ஏற்கனவே பெரும் பணத்தை இழந்த பிரபு, தமது வீட்டை விற்க முன்பணம் பெற்று அதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்திருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீண்டு வர முடியாது என்பதற்கு பிரபுவின் கதை தான் வேதனையான எடுத்துக்காட்டு.

ஆன்லைன் சூதாட்டத்தடை நீக்கப்பட்ட பின்னர் கடந்த ஓராண்டில் நிகழும் 27ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என அரசு அறிவித்த பிறகு நிகழ்ந்த 4ஆவது தற்கொலை இது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு இன்னும் தயங்குவது ஏன்?

இதையும் படிங்க;-  பாமக கொடியை ஏற்றி வைத்துவிட்டு மேடையில் தேம்பி தேம்பி அழுத ராமதாஸ்.. அதிர்ந்து போன பாட்டாளிகள்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனியும் ஓர் உயிர் கூட பறிபோகக் கூடாது.  வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதியுடன் சூதாட்டத்தடை நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது. அதற்குள்ளாக ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன் என ராமதாஸ் கூறியுள்ளார். 

click me!