அட கடவுளே.. நாம் தமிழர் கட்சியில் பயங்கர சோகம்.. தலையில் அடித்துக் கதறும் சீமான்..

Published : Aug 09, 2021, 11:04 AM IST
அட கடவுளே.. நாம் தமிழர் கட்சியில் பயங்கர சோகம்.. தலையில் அடித்துக் கதறும் சீமான்..

சுருக்கம்

இந்நிலையில் இந்த துயரச் செய்தி குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இடும்பாவனம் கார்த்திக், ஒரே மேடையில் பேசி, ஒன்றாக உணவருந்தி, சிரித்துப் பேசி பழகிய நாட்கள் எல்லாம் திரும்ப வருமா அண்ணே.. 

நாம் தமிழர் கட்சியின் முக்கிய  உறுப்பினர்களில் ஒருவரான கடல் தீபன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அக்கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்ட கட்சித் தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவர் கடல் தீபன், இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களில்  ஒருவராக இருந்தார். அக்கட்சியில் தொடக்கத்திலிருந்தே சீமானுக்கு உறுதுணையாக செயல்பட்டு வந்த இவர், அக்காச்சி நடத்தும் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர் ஆவார். 

கடல் தீபன்  கடலூர் செல்லகுப்பத்தை சேர்ந்தவர் ஆவர். பொறியாளரான இவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் கடலூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டார். அதேபோல அவர் நாம் தமிழர் கட்சி  நடத்திய போராட்டங்களால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை ஆனவர் ஆவர். கடந்த சில தினங்களாக உடல் நல பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். சீமானுக்கு உற்ற துணையாகவும். கள போராளியாகவும் இருந்த கடல் தீபன் உயிரிழப்பு சீமானை  அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்நிலையில் இந்த துயரச் செய்தி குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இடும்பாவனம் கார்த்திக், ஒரே மேடையில் பேசி, ஒன்றாக உணவருந்தி, சிரித்துப் பேசி பழகிய நாட்கள் எல்லாம் திரும்ப வருமா அண்ணே.. சிறைக்கு செல்லும் போதும் சிரித்த முகத்தோடு சென்றீர்களே, இனி அந்த முகத்தை எப்போது காண்போம். கடலூர் வெள்ளத்தில் ஓடி ஓடி மக்களை காத்தீர்களே. உங்களை இனி எப்படி காண்போம் என தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். சீமானின் தம்பியாக, நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்த கடல் தீபனின் மரணம் சீமானை நிலைகுலைய செய்துள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் இந்தியாவுக்கு நன்றியோடு இருங்கள்..! யூனுஷுக்கு ஷேக் ஹசீனா எச்சரிக்கை.!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!