இந்த கூட்டத்தொடரிலேயே ஆன்லைன் ரம்மி தடை சட்டம் வருவது உறுதி.. அடித்து கூறும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி..!

By vinoth kumarFirst Published Aug 9, 2021, 10:17 AM IST
Highlights

தமிழக முதல்வர், உயர்நீதிமன்றம் காட்டியுள்ள அடிப்படை காரணங்களை கருத்தில் கொண்டு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு தடை விதிக்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் லாட்டரி தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி ஆன்லைனில் நம்பர் லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து ரோட்டரி சங்கம் சார்பில் 25 ஆக்சிஜன் சிலிண்டர்கள், செரிவூட்டிகள், ரத்தம் சேமிக்கும் கருவிகள் உள்ளிட்டவைகளை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ரகுபதி;- தமிழக முதல்வர், உயர்நீதிமன்றம் காட்டியுள்ள அடிப்படை காரணங்களை கருத்தில் கொண்டு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு தடை விதிக்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி கடந்த ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் குறைகளை எடுத்துக்கூறி அதை நிவர்த்தி செய்து அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நிச்சயமாக ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படும். 7 தமிழர்கள் விடுதலையில் குடியரசுத் தலைவரிடம்  முதல்வர் மனு கொடுத்துள்ளார். அதற்கு டியரசுத் தலைவர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். இல்லையென்றால் சட்ட வல்லுனர்களை கலந்தாலோசித்து அதன்பிறகு நடவடிக்கை மேற்கொள்வோமே தவிர எவ்வித முரண்பாடுகளுக்கும் தமிழக அரசு இடம் கொடுக்காது.

தமிழகத்தில் லாட்டரி தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி ஆன்லைனில் நம்பர் லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

click me!