இரவு முழுக்க ஆபாச மெசேஜ்.. வீடியோ கால்.. சக ஊழியரின் சைகோ தனம்.. காவல் நிலையத்தில் இளம் பெண் கதறல்.

Published : Aug 09, 2021, 09:54 AM IST
இரவு முழுக்க ஆபாச மெசேஜ்.. வீடியோ கால்.. சக ஊழியரின் சைகோ தனம்.. காவல் நிலையத்தில் இளம் பெண் கதறல்.

சுருக்கம்

பல பெண்கள் இதை வெளியில் கூற பயந்து கொண்டு வேலையை பாதியில் கைவிடும் நிலைக்கு ஆளாகி வருகின்றனர். அதே நேரத்தில் சில பெண்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து தைரியமாக முன் வந்து புகார் கொடுக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.  

நள்ளிரவில் அசிங்க அசிங்கமாக  ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுப்பதுடன், வீடியோ கால் செய்து பேசும்படி டார்ச்சர் செய்து வரும் சக ஊழியர் மீது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பணிக்குச் செல்லும் பெண்கள்  சக ஊழியர்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் கொடுமைகளும் அரங்கேறி வருகிறது. 

பல பெண்கள் இதை வெளியில் கூற பயந்து கொண்டு வேலையை பாதியில் கைவிடும் நிலைக்கு ஆளாகி வருகின்றனர். அதே நேரத்தில் சில பெண்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து தைரியமாக முன் வந்து புகார் கொடுக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சக ஊழியர் தொடர்ந்து தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியும் மற்றும் வீடியோ கால்செய்துத் துன்புறுத்தி வருவதாக இளம்பெண் ஒருவர் காவல் நிலைத்தில் புகார் கொடுத்துள்ளார். சென்னை சூளைமேடு அண்ணா மெயின் சாலையை சேர்ந்தவர் மகாலட்சுமி(22). புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் இயங்கி வரக்கூடிய தனியார் ஹோட்டலில் உணவு டெலிவரி செய்யும் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

அதே தனியார் ஹோட்டலில் வேளச்சேரி கிளையில் பணிப்புரிந்து வந்த மதன் என்பவருடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மகாலட்சுமிக்கு அறிமுகம் ஏற்பட்டது. இந்நிலையில் மதன் அலுவலக குரூப்பில் இருந்து கடந்த 5 ஆம் தேதி மகாலட்சுமியின் செல்போன் எண்ணை எடுத்து ஆபாசமாக மெசெஜ் அனுப்பியும், ஒரு நபரை தான் பழிவாங்க வேண்டும், அதற்கு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து உதவ வேண்டும் எனவும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதே போல் நள்ளிரவில் வீடியோ கால் செய்தும் டார்ச்சர் செய்து வருகிறார். இதனால் மகாலட்சுமி நேற்று வேப்பேரி காவல் நிலையத்தில் மதன் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

CM Vijay: விஜய்க்கு சிம்மாசனம் கிடைத்தது எப்படி.?! சினிமாவிலும், அரசியலிலும் வெற்றியை தேடி கொடுத்த சீக்ரெட் இதுதான்.!
Govt Scheme: ரூ.4,000 அரசு மானியம் வேண்டுமா? இந்த ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்!