அடகடவுளே.. இந்தியாவில் வேகமாக பரவுகிறது Omicron BA-2 உருமாறிய வைரஸ்.. தலையில் அடித்துக் கொள்ளும் மருத்துவர்கள்

By Ezhilarasan BabuFirst Published Jan 24, 2022, 6:23 PM IST
Highlights

கொரோனாவின் BA-2  என்ற புதிய மாறுபாட்டின் அறிகுறிகள் ஒமைக்ரான் அறிகுறிகளை போலவே இருக்கின்றன. ஒமைக்ரான் தொடும் மரபணு மூலமாக BA-2 இல்லை,  இந்த மாறுபாட்டை மரபணு வரிசைமுறை மூலம் மட்டுமே அடையாளம் காண முடியும்

ஒமைக்ரான் BA-2 என்ற பிறழ்வு வைரஸ் இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது. இதுவரை 6 குழந்தைகள் உட்பட 14 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 530 மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனாவின் ஒமைக்ரான் பாதிப்பிற்கு மத்தியில் வைரசின் மற்றொரு பிறழ்வு வைரஸ் உருவாகி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வகை வைரஸுக்கு BA-2 என பெயரிடப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் இந்தூரில் ஒமைக்ரான் BA-2 பிறழ்வு வைரஸால் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 6 குழந்தைகள் அடங்குவர். இதே நேரத்தில்  நாடு முழுவதிலும் இருந்து 530 மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. இந்த மாறுபாடு ஒமைக்ரான் போல வேகமாக பரவக்கூடியது. இத்தகைய சூழ்நிலையில் அது இந்தியாவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அது விரைவில் கண்டுபிடிக்க படாவிட்டால் அது மக்கள் மத்தியில் பரவுவதை தடுப்பதே பெரும் சவாலாக மாறிவிடும் என்றும், சோதனை கருவிகளால் கூட அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது கவலைக்குரிய விஷயம் என்றும் இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த அறிகுறியும் தென்படாது, ஆனால் அது பலருக்கும் பரவக்கூடியது, பிரிட்டன் ஸ்வீடன் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒமைக்ரான் மாறுபாடு தற்போது இந்தியாவில் சமூக பரவலாக மாறியுள்ளது. தற்போது நாட்டில் சுமார் 22 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒமைக்ரான் BA-2 முதலில் எங்கு எப்படி பரவியது என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பிரிட்டிஷ் ஹெல்த் புரோடக்சன் ஏஜென்சியின் கூற்றுப்படி இது சத்தமில்லாமல் பரவும் வைரஸ் என்றும், முதன் முதலில் இங்கிலாந்தில் டிசம்பர் 6- 2021 அன்று கண்டறியப்பட்டது, அங்கு 426 வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன, இது மற்ற வகைகளை விட வேகமாக பரவக்கூடியது, இது இங்கிலாந்தில் விசாரணைக்கு உட்பட்ட பிரிவில் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. 

BA-2  மாறுபாட்டின் பண்புகள்...
கொரோனாவின் BA-2  என்ற புதிய மாறுபாட்டின் அறிகுறிகள் ஒமைக்ரான் அறிகுறிகளை போலவே இருக்கின்றன. ஒமைக்ரான் தொடும் மரபணு மூலமாக BA-2 இல்லை,  இந்த மாறுபாட்டை மரபணு வரிசைமுறை மூலம் மட்டுமே அடையாளம் காண முடியும், இது எத்தனை நாடுகளுக்கு பரவி உள்ளது.. கொரோனாவின் புதிய மாறுபாடுகளை அடையாளம் காண கடந்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி முதல் அனைத்து நாடுகளிலும் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியா உட்பட சுமார் 40 நாடுகள் ஏற்கனவே தங்கள் தரவுகளை அனுப்பியுள்ளன. நிபுணர்களின் கூற்றுப்படி கொரோனாவின் புதிய மாறுபாடு எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கொரோனாவின் அனைத்து மாறுபாடுகள் குறித்தும் ஆராய்ச்சி செய்து வரும் ஜெனிவா பல்கலைக் கழகத்தின் இயக்குனர் பிளா ஹோல்ட் அதன் பெயரைக் கேட்டவுடன் பயப்பட வேண்டாம், ஆனால் எச்சரிக்கை அவசியம் என கூறியுள்ளார். புதிய  பிறழ்வு BA-2 ஆனது ஒமைக்ரானை போலவே பரவக்கூடியது, இருப்பினும் இது எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 

click me!