எங்க இடத்திலா கிரிக்கெட் விளையாடுறீங்க... சிறுவர்கள் மீது பாஜக அமைச்சர் மகன் துப்பாக்கி சூடு..!

By Thiraviaraj RMFirst Published Jan 24, 2022, 5:42 PM IST
Highlights

பீகார் அமைச்சர் நாராயண் பிரசாத்தின் மகன் தனது குடும்பத்தினருக்கு சொந்தமான இடத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை மிரட்டுவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

பீகார் அமைச்சரின் மகன் தனது பண்ணையில் கிரிக்கெட் விளையாடும் குழந்தைகளை விரட்ட துப்பாக்கியால் சுட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


பீகார் அமைச்சர் நாராயண் பிரசாத்தின் மகன் தனது குடும்பத்தினருக்கு சொந்தமான இடத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை மிரட்டுவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடும் வீடியோ வைரலாகி வருகிறது. தனது பண்ணை வீட்டில் உள்ளூர் மக்கள் அத்துமீறிக் கொண்டுள்ளதாக அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பீகார் சுற்றுலாத்துறை அமைச்சர் நாராயண் பிரசாத்தின் மகன் தனது பண்ணையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை பயமுறுத்துவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

பீகாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள ஹர்டியா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த அப்பகுதி மக்களிடம் மைதானத்தை காலி செய்யுமாறு அமைச்சரின் மகன் பப்லு பிரசாத் சென்ற போது தகராறு ஏற்பட்டது. அவர் உள்ளூர்வாசிகள் சிலரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் தனது கைத்துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார். இச்சம்பவத்தில் பல உள்ளூர்வாசிகள் காயமடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள், அமைச்சரின் வீட்டுக்குச் சென்று, அவரது வாகனத்தை அடித்து நொறுக்கி, அவரது மகன் பப்லுவை சரமாரியாக தாக்கினர்.


இதுகுறித்து அமைச்சர் நாராயண் பிரசாத் கூறுகையில், ‘எனக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க கிராம மக்கள் சிலர் முயன்றனர். அவர்கள் எனது குடும்பத்தினரை தாக்கினர். அதை தடுப்பதற்காகவே, எனது மகன் உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அவரையும் பொதுமக்கள் கற்களால் தாக்கினர். எனது வாகனத்தையும் சேதப்படுத்தினர்’ என்றார். மேற்கண்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு எதிர்கட்சி தலைவரான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் சக்தி சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

click me!