அட கடவுளே.. மேயர் கூட்டத்தில் ”விக்ரம்” படம் பார்த்த அரசு அதிகாரிகள்.. வைரலாகும் புகைப்படம்

Published : Jul 23, 2022, 03:07 PM IST
அட கடவுளே.. மேயர் கூட்டத்தில் ”விக்ரம்” படம் பார்த்த அரசு அதிகாரிகள்.. வைரலாகும் புகைப்படம்

சுருக்கம்

மக்களின் குறைகளை பேச வேண்டிய கூட்டத்தில், அதிகாரிகள் அதை பற்றி சிறிதும் கவலையில்லாமல் அதிகாரிகள் தங்களது செல்போன்களில் ஆழ்ந்து இருந்தனர். மேலும் சில அதிகாரிகள் கூட்டத்திலிருந்து பாதியிலேயே கிளம்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூரில் நேற்று தனியார் திருமண மண்டபத்தில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 11 வது மண்டலத்தில் உள்ள வார்டுகளின் வளர்ச்சி மற்றும் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர், மாநகராட்சி ஆணையர்,  மதுரவாயல் எம்.எல்.ஏ, மணடலக்குழுத் தலைவர் பங்கேற்றனர். மேலும் இக்கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

மேலும் படிக்க:முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐக்கு அனுமதி.. மீண்டும் சூடுபிடிக்கும் குட்கா ஊழல்..!

கூட்டத்தில் மேயர் மற்றும் துணை மேயர் வார்டுகளில் உள்ள வளர்ச்சி பணிகள், மக்கள் குறைகள் குறித்து அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சில அதிகாரிகள் அதையெல்லாம் கேட்காமல் தங்களது செல்போன்களில் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பார்த்துக் கொண்டிருந்தனர். அதோடுமட்டுமல்லாமல் சில அதிகாரிகள் தங்களது செல்போன்களில் வீடியோ கேம்களை விளையாடிக் கொண்டிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க:அதிமுகவின் வங்கி கணக்குகளை முடக்குங்க... ஸ்ட்ரைட்டாக ஆர்பிஐக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ்

இதற்கெற்கெல்லாமல் ஒரு படி மேலாக, அதிகாரி ஒருவர் தனது செல்போனில் சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை ஜாலியாக பார்த்துக்கொண்டிருக்கிறார். மக்களின் வளர்ச்சி பணி குறித்தான ஆலோசனைக் கூட்டத்தில், அதிகாரிகள் அலட்சியமாக செல்போனில் கேம், படம் பார்த்துக்கொண்டிருந்த சம்பவங்கள் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் குறைகளை பேச வேண்டிய கூட்டத்தில், அதிகாரிகள் அதை பற்றி சிறிதும் கவலையில்லாமல் அதிகாரிகள் தங்களது செல்போன்களில் ஆழ்ந்து இருந்தனர். மேலும் சில அதிகாரிகள் கூட்டத்திலிருந்து பாதியிலேயே கிளம்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி