ஓ.பன்னீர்செல்வம் முடிந்துபோன சகாப்தம் அவருக்கு முக்கியத்துவம் அளிக்க தேவை இல்லை என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடித்து செய்தியாளர்களிடம் பேசிய நத்தம் விஸ்வநாதன் மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்கு அதிக அளவில் கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்களை அழைத்துச் செல்வது என்று அதற்கான ஏற்பாடுகளை செய்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
மேலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக உடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது என்பது முடிவு செய்யப்பட்ட ஒன்று. அண்ணாமலையின் நடை பயணம் குறித்து கேள்விக்கு, அவரது கட்சி விஷயம் அவரிடமே கேளுங்கள் என பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
undefined
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 2 குழந்தைகள் மாயம்; காவல்துறை விசாரணை
தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இணைந்தது பற்றி கேட்டதற்கு ஓபிஎஸ் முடிந்து போன சகாப்தம் என்றும், அவருக்கு முக்கியத்தும் கொடுக்க வேண்டியதில்லை என விமர்சித்து பதில் அளித்தார். பின்னர் 25 ஆவது வார்டு நகர்மன்ற அதிமுக உறுப்பினர் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் ராஜா முகமது ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு மாநாடு அழைப்பிதளுடன், தட்டு, வெற்றிலை பாக்கு, அழைப்பிதழ் மற்றும் ஒரு கிலோ தக்காளி என 500 பேருக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பொதுமக்களுக்கு வழங்கினார்.
11 மணி நேரத்தில் 1330 திருக்குறளை தென்னை ஓலையில் எழுதி 11ம் வகுப்பு மாணவன் சாதனை