தம்பி அண்ணாமலை அதை பற்றி பேசாதீங்க.. நீங்க யாருன்னு எனக்கு தெரியும் ? கொதித்த சீமான்

By Raghupati RFirst Published Aug 19, 2022, 10:10 PM IST
Highlights

குஜராத்தில் மோடி இலவசம் கொடுக்கவில்லையா ? உங்களுக்கு இலவசம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் இலவசம் கொடுத்தாலும் நல்ல கல்வி கொடுக்கிறாரே.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில் ‘மாயோன் பெருவிழா’ கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், 'இலவசம் வேண்டாம் என்று சொல்வதற்கு மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது. குஜராத்தில் மோடி இலவசம் கொடுக்கவில்லையா ? உங்களுக்கு இலவசம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. 

மேலும் செய்திகளுக்கு..நாம ஜெயிச்சிட்டோம்.. குஷியில் ஓபிஎஸ்” ஆடிப்போன எடப்பாடி.. அதிமுக அதோகதியா?

அரவிந்த் கெஜ்ரிவால் இலவசம் கொடுத்தாலும் நல்ல கல்வி கொடுக்கிறாரே. அண்ணாமலை மெயின் ஆர்ட்டிஸ்ட் கிடையாது. வசனம், இயக்குனர் எல்லாம் வேறு ஆள். உங்களுக்கு அந்த வசனமே இல்லையே. அண்ணாமலைக்கு இப்படி பேச ஏதாவது உரிமை இருக்கிறதா? தம்பி அண்ணாமலைக்கு இந்த முடிவு எடுக்கும் உரிமை இருக்கிறதா ? உங்கள் எஜமான் அமித் ஷா இப்படி சொன்னாரா? உங்களின் பெரிய எஜமான் மோடி சொன்னாரா? இனிமே எதுக்கு கூட்டணி ? நீங்க கூட்டணியில் தானே இயங்குகிறீர்கள் ? தமிழ்நாட்டில் ஏன் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும்.

அவர்கள் ஆட்சி அமைக்காமலே திமுக வழியாக ஆட்சி செய்து கொண்டு தானே இருக்கிறார்கள். தம்பி அண்ணாமலை இப்படி கூட்டணி இல்லை என்று சொல்வது ஒரு ஆற்றாமையில் பேசுகிறார். ஆனால் இப்படி சொல்லும் உரிமை அவருக்கு இல்லை. இதில் முடிவு எடுக்கும் உரிமை அவரிடம் இல்லை. அதை எல்லாம் மேலிடம்தான் முடிவு எடுக்கும். அவருக்கு இதற்கான் உயரம், உரிமை இல்லை.தமிழ்நாட்டில் மின்சாரம் இருந்தால் அதை நம்முடைய அனுமதியில்லாமல் குஜராத்திற்குக் கொடுப்பேன் என மோடி சொல்கிறார். 

மேலும் செய்திகளுக்கு..அடுத்த ஆளுநர் ரஜினிகாந்த்.. பாஜக போட்ட ஸ்கெட்ச் - இதுதான் ரஜினி முடிவா ?

அதுபோல் கர்நாடகாவைக் கேட்காமல் காவிரி தண்ணீரைக் கொடுப்பாரா?அரிசி எனக்கு, உமி உனக்கு என்பது போல நாட்டை விற்று விட்டு கொடியை நமக்குக் கொடுக்கிறார்கள். அந்த கொடியும் காசுதான். கொடியை எப்படிப் பிடிக்க வேண்டும் எனத் தெரியாதவர்களெல்லாம் இன்று தேசப்பற்றைப் பற்றிப் பேசுகிறார்கள்’ என்று மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தார் சீமான்.

மேலும் செய்திகளுக்கு..வேறு நபருடன் உடலுறவு.. ஆண்களை முந்திய பெண்கள் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

click me!