பாஜகவின் B டீம் யாரு தெரியுமா ? அட நம்ம சீமான் தான்.. போட்டு உடைத்த கே.பாலகிருஷ்ணன்

Published : Aug 19, 2022, 09:53 PM IST
பாஜகவின் B டீம் யாரு தெரியுமா ? அட நம்ம சீமான் தான்.. போட்டு உடைத்த கே.பாலகிருஷ்ணன்

சுருக்கம்

தமிழக அரசு அந்த அறிக்கையை வெளியிடாமல் இருப்பது சர்ச்சைக்கும், சந்தேகத்திற்கும் இடம் அளிக்கிறது.

மதுரையில் உள்ள மார்க்சிஸ்ட் காம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். ‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் இருந்து வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது. 

மேலும் செய்திகளுக்கு..நாம ஜெயிச்சிட்டோம்.. குஷியில் ஓபிஎஸ்” ஆடிப்போன எடப்பாடி.. அதிமுக அதோகதியா?

அறிக்கையில் துப்பாக்கிச் சூட்டிற்கும் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதும், காவல்துறை அதிகாரிகள் மட்டுமே பொறுப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் ஏற்புடையதாக இல்லை. தமிழக அரசு அந்த அறிக்கையை வெளியிடாமல் இருப்பது சர்ச்சைக்கும், சந்தேகத்திற்கும் இடம் அளிக்கிறது. அறிக்கையை வெளியிட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

மேலும் செய்திகளுக்கு..அடுத்த ஆளுநர் ரஜினிகாந்த்.. பாஜக போட்ட ஸ்கெட்ச் - இதுதான் ரஜினி முடிவா ?

மத்திய அரசு மாநில அரசுகளை துச்சமாக நினைக்கிறது. மின்சார வாரியத்தை சின்னாபின்னமாக்கி அதை முழுமையாக தனியார் வசம் ஒப்படைக்க நினைக்கிறது. சீமான் பாஜகவின் பி-டீம் போலவே பேசிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் திமுக - பா.ஜ.க கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது என சீமான் சொல்வது கற்பனையான பேச்சு தான்’ என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு..வேறு நபருடன் உடலுறவு.. ஆண்களை முந்திய பெண்கள் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Scheme: இனி நீங்க சொந்த வீட்டுல இருக்க போறீங்க.! வீடு கட்ட அள்ளிக்கொடுக்கும் விஜய்.! உடனே இடத்த ரெடி பண்ணுங்க.!
India Independence: இந்திய சுதந்திரம் உலக விடுதலைக்கு வித்திட்ட கதை! இதன் பிறகு எத்தனை நாடுகள் சுதந்திரம் பெற்றன தெரியுமா?