அதிமுக பொதுக்குழு வழக்கு மேல்முறையீடு மனு மீதான விசாரணை திங்கள் கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்க உள்ளது.
அதிமுகவில் கடந்த இரு மாதங்களாக இரட்டை தலைமைகளுக்கு இடையே அதிகார போட்டி நிலவி வந்தது. இது கடந்த ஜூன் 23ம் தேதி பூதாகரமாக வெடித்தது. அன்றைய தினம் ஓபிஎஸ், எடப்பாடி ஆதரவாளர்களால் மோசமான நிலையில் அவமானப்படுத்தப்பட்டார்.பொதுக்குழுவுக்கு அவர் வந்த பிரச்சார வாகனம் பஞ்சராக்கப்பட்டது. அவர் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது.
அப்போது கொண்டு வந்த 23 தீர்மானங்கள் அனைத்தும் அன்றைய தினம் நிராகரிக்கப்பட்டதாக பொதுக் குழு அறிவித்தது. இதையடுத்து ஒற்றைத் தலைமை குறித்த புதிய தீர்மானம் ஜூலை 11 ஆம் தேதி கூட்டி முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்தது. ஓபிஎஸ்ஸின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த கூட்டம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் கூடிய நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் செய்திகளுக்கு..அடுத்த ஆளுநர் ரஜினிகாந்த்.. பாஜக போட்ட ஸ்கெட்ச் - இதுதான் ரஜினி முடிவா ?
அப்போது ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்றிருந்தார். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் கடந்த 17ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்ற ஜெயசந்திரன் வழக்கில் தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. ஜூன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலை தொடர வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது ஜூலை 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும், இதற்கு அடுத்த பொதுக்குழு செல்லாது என்று அறிவித்தார்.
அதிமுக பொதுக்குழு வழக்கு மேல்முறையீடு மனு மீதான விசாரணை திங்கள் கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. தனி நீதிபதி தீர்ப்பிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்த மனுக்கள் இரட்டை நீதிபதி அமர்வில் வழக்கு திங்கள் கிழமை விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் முருகன் ஆகியோர் வழக்கை விசாரிக்கின்றனர். திங்கள் கிழமை காலை முதல் வழக்காக இந்த வழக்கு விசாரணை செய்யப்பட உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..நாம ஜெயிச்சிட்டோம்.. குஷியில் ஓபிஎஸ்” ஆடிப்போன எடப்பாடி.. அதிமுக அதோகதியா?
இந்நிலையில் இன்று மதுரை ஒத்தக்கடை பகுதியில் ஜான் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றுதான் என்னால் கூற முடியும். 90 சதவீதம் அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி பின்னாடி தான் நிற்கிறார்கள். இதனால் ஓ பன்னீர்செல்வம் நீதிமன்றம் சென்றது தவறானது. தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் நாங்கள் நீண்ட நாட்களாக கூறிவரும் ஒரு கோரிக்கையாக உள்ளது.
வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம். கூட்டணி என்பது தேர்தலுக்கு முன்பாக எடுக்கும் நிலைப்பாடு அதை அப்போது பார்ப்போம். அதிமுக அமைச்சராக இருந்தாலும் திமுக அமைச்சராக இருந்தாலும் எந்த அமைச்சர்களாக இருந்தாலும் அவர் கார் மீது செருப்பறிவது குற்றம் தான் இதை தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் வன்மையாக கண்டிக்கின்றது’ என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு..வேறு நபருடன் உடலுறவு.. ஆண்களை முந்திய பெண்கள் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்