காருக்குள் வைத்து பெண் எஸ்.பியிடம் சில்மிஷம் செய்த டிஜிபி வழக்கு.. முக்கிய ஆவணங்கள் மாயம்.. நீதிபதி அதிர்ச்சி.

By Ezhilarasan BabuFirst Published Aug 19, 2022, 7:30 PM IST
Highlights

போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை  கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முக்கிய ஆவணங்கள்  மாயமாகி  உள்ளதால் நீதிபதி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை  கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முக்கிய ஆவணங்கள்  மாயமாகி உள்ளதால் நீதிபதி அதிர்ச்சி அடைந்துள்ளார். மாயமான ஆவணங்களை  வரும் 25 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிபிசிஐடிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றின் பாதுகாப்பு பணிக்காக அம்மாவட்ட எஸ்பி வருகை தந்திருந்தார், அந்த பெண் எஸ்.பி சார்ந்துள்ள மாவட்டத்திற்கு சிறப்பு டிஜிபி வந்திருந்தார், அந்த சிறப்பு டிஜிபியை மரியாதை நிமித்தமாக எஸ்.பி சந்தித்தார். அப்போது அந்த பெண் எஸ்.பியை தனது காரில் ஏறுமாறு கூறிய சிறப்பு டிஜிபி நீண்டதூரம் அவருடன் காரில் பயணித்ததுடன் அந்த பெண் எஸ்பியின் கைகளை பிடித்துக் கொண்டு பாட்டுப் பாடச் சொல்லி கொஞ்சியதுடன்,

இதையும் படியுங்கள்: கைதாகிறார் கைலாசா ஆண்டவர்.. கோர்ட் எடுத்த அதிரடி முடிவு - எல்லாம் முடிஞ்சு போச்சு !

தகாத முறையில் அவரிடம் நடந்து கொண்டதாகவும், தகாத இடங்களில் கைவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது. ஒரு கட்டத்தில் காரில் இருந்து கீயே இறங்கிய அந்தப் பெண் எஸ்.பி,  சிறப்பு  டிஜிபியின் பாலியல் வக்கிரம் குறித்து சட்டம் ஒழுங்கு டிஜிபியான திரிபாதியிடம் புகார் கொடுத்தார். புகார் அளிக்கப்பட்டதையடுத்து இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாரை விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு பெண் அதிகாரி தலையிலும் குழுஅமைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: பிடிஆர் மீது செருப்பு வீச சொன்ன சரவணன்..? தூக்கி உள்ள வைக்கச் சொல்லி பாஜக போலீசில் புகார்..

இதனையடுத்து பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பொதுநல வழக்கு ஒன்றும் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அந்த சில்மிஷ டிஜிபிக்கு ஒத்தாசையாக இருந்து சிறப்புக் காவல் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான் இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்களான அந்த சில்மிஷ டிஜிபிக்கும் இந்த பெண் எஸ்.பிக்கும் இடையே நடந்த உரையாடல், வாட்ஸ்அப் மெசேஜ் போன்ற முக்கிய ஆவணங்கள் மாயமாகி  உள்ளது, ஆவணங்கள்  மாயமானது கண்டு நீதிபதி புஷ்பராணி அதிர்ச்சி அடைந்துள்ளார். காணாமல் போன ஆவணங்களை ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

click me!