இனி என்னை மையப்படுத்திதான் தமிழக அரசியலே சுற்றும்... டாப் கியரில் சீமான்..!

Published : Sep 26, 2021, 09:17 PM IST
இனி என்னை மையப்படுத்திதான் தமிழக அரசியலே சுற்றும்... டாப் கியரில் சீமான்..!

சுருக்கம்

இனி என்னை மையப்படுத்திதான் தமிழக அரசியலே சுற்றும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  

சென்னை போரூரில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதானி துறைமுகத்தில் ரூ. 21 ஆயிரம் கோடி ஹெராயின் போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இதற்கு முன்பு எத்தனை கப்பல்களில் இதுபோல நடந்துள்ளது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஆனால், இந்தக் கடத்தலில் கணவன்- மனைவி மட்டுமே தொடர்பு உள்ளதாக கைது செய்யப்பட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது. போதைப்பொருள் உள்ளே வந்தால் நாடு மயக்கத்திலே இருக்கும். தனியார்மயத்தால் வரும் விளைவுகளில் இதுவும் ஒன்று.


 மேட் இன் தமிழ்நாடு என்று உருவாக வேண்டும் என்பதே எங்களுடைய கனவு. நாங்கள் அதை சொன்னபோது அது சாத்தியமில்லை என்று பேசினார்கள். ஆனால், இன்று மேட் இன் தமிழ்நாடு என்று பேசுகிறார்கள். தற்போது மேக்கிங் இந்தியாவாக இருக்கும்போது மேட் இன் தமிழ்நாடு என்று எப்படி கொண்டு வருவீர்கள்? இனி என்னை மையப்படுத்திதான் தமிழக அரசியலே சுற்றும். உள்ளாட்சித் தேர்தலில் ஆட்களை திமுகவினர் கடத்துகிறார்கள். பெண் வேட்பாளர்களை மிரட்டுகிறார்கள். அவர்களால் நாங்கள் தலைமறைவாக இருக்கிறோம். தேர்தலில் விலகி இருந்தால் பணமும், அரசு வேலையும், ஒப்பந்தமும் தருவதாக திமுகவினர் கூறுகிறார்கள்” என சீமான் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!