தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியில் வென்ற ஒரே ஒரு கவுன்சிலரும் திமுகவில் இணைந்துவிட அக்கட்சி பெரும் அதிர்ச்சியில் இருக்கிறது.
சென்னை: தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியில் வென்ற ஒரே ஒரு கவுன்சிலரும் திமுகவில் இணைந்துவிட அக்கட்சி பெரும் அதிர்ச்சியில் இருக்கிறது.
தமிழகத்தில் எவ்வளவோ அரசியல் கட்சிகள் இருக்கின்றன. கட்சிகளில் பிளவுகள் ஏற்பட்டு இங்கிருப்பவர் அங்கு, அங்கிருப்பவர் இங்கே மாறுவது சாதாரணமான ஒன்றுதான். ஆனால் ஒருவர் நாம் தமிழர் கட்சியில் இருந்த ஒருவர் திமுகவில் இணைத்து கொண்டிருப்பது அக்கட்சியின் தலைமையை செமத்தியாக அதிர வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியில் தமிழகத்தில் ஒரே ஒரு கவுன்சிலர் தான் வெற்றி பெற்றார். அவர் பெயர் சுனில். நாம் தமிழர் கட்சிக்கு முதல் வெற்றியை பெற்று தந்தவரும் சுனில் தான்.
undefined
உள்ளாட்சி தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் என்ற ஊராட்சி ஒன்றியத்தில் 11வது வார்டில் வெற்றி பெற்றவர். அதுவும் நாம் தமிழர் கட்சியில் விவசாயி சின்னத்தில் வென்று கவுன்சிலராகி அனைவர் பார்வையையும் திருப்பிவர்.
அவர் இப்போது திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தம்மை இணைத்து கொண்டு உள்ளார். சுனிலுடன் ஏராளமான நாம் தமிழர் கட்சியினரும் திமுகவில் இணைந்தாலும் சுனிலின் இணைவு நாம் தமிழர் கட்சியின் தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாகவே கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சியின் ஒரே கவுன்சிலரும் திமுகவில் ஐக்கியமாகிவிட்டதால் நாம் தமிழர் தம்பிகளும் சோகத்தில் இருப்பதாக தெரிகிறது.