நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
திமுக கூட்டணியில் விசிக
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து வழங்கியுள்ளது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சிக்கு புதுவை உள்ளிட்ட தமிழகத்தில் 9 தொகுதி என 10 தொகுதிகளை வழங்கியுள்ளது. அடுத்ததாக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
undefined
வேட்பாளர்கள் யார்.?
அதன் படி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவதித்துள்ளார்.அதன் படி சிதம்பரம் தொகுதியில் மீண்டும் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ரவிக்குமார் இந்த முறை பானை சின்னத்தில் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்படுள்ளது. மேலும் இந்த தேர்தல் காங்கிரஸ் பாஜகவிற்கும் அல்ல, இந்தியா கூட்டணிக்கும் பாஜகவிற்கும் இடையில் அல்ல , மக்களுக்கும் சங்பரிவாருக்கும் இடையேயான யுத்தம் தான் இந்த தேர்தல் என கூறினார்.
இவிஎம் மோசடி திட்டம்
எனவே நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்து உள்ளனர். அந்த வகையில் தேர்தல் முடிவு அமையும் என கூறினார். ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தை வைத்து ஆட்சி கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். இதற்கு ஒரே தீர்வு 100 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெறவேண்டும். 60% 70% வாக்குப்பதிவு இருந்தால் சதியை முறியடிக்க முடியாது. எனவே தமிழக மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் பாஜக இரண்டாவது பெரிய சக்தியாக வர பல்வேறு சதி முயற்சியை மேற்கொண்டு வருகிறது. வட இந்தியாவை போல் இங்கும் வெறுப்பு அரசியலை விதைக்க முயற்சி எடுக்கிறார்கள், பெரியார சிலை. வள்ளுவர் சிலை மீது வன்மத்தை தெளிக்கிறார்கள் என திருமாவளவன் கூறினார்.
இதையும் படியுங்கள்
பிரேமலதா விஜயகாந்த் மீது 3 பிரிவில் திடீர் வழக்கு பதிவு செய்த போலீசார்.! என்ன காரணம் தெரியுமா.?