நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது ஏன்.? அன்புமணி விளக்கம்

By Ajmal KhanFirst Published Mar 19, 2024, 8:42 AM IST
Highlights

 60 ஆண்டுகளாக ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களுக்கு ஒரு வெறுப்பான சூழல் உள்ளது என தெரிவித்துள்ள அன்புமணி, தமிழகத்தில் மக்களுக்கு மாற்றம் வர வேண்டும் என எண்ணம் ஆழமாக உள்ளது. அதனை பூர்த்தி செய்ய இந்த நிலையை எடுத்துள்ளதாஎ தெரிவித்தார். 
 

பாஜக கூட்டணியில் பாமக

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ளது. மக்கள் வாக்களிக்க இன்னும் 30 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில், பாஜக தங்கள் கூட்டணியை பலப்படுத்த தீவிரமாக முயன்று வருகிறது. இந்தநிலையில் இன்று காலை பாமக- பாஜக இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. திண்டிவனத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வந்தார். அப்போது பாஜக -பாமக இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. அதில் நாடாளுமன்ற தேர்தலில் பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து கையெழுத்தானது. 

Latest Videos

பாஜக கூட்டணியில் இணைந்தது ஏன்.?

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி,  10 ஆண்டு காலமாக பாமக டெல்லியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கமாக இருந்து வருகிறது. வருகிற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாமக தேசிய ஊனநாயக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட முடிவு செய்துள்ளது. நாட்டின் நலன் கருதி, மோடியின் நல்லாட்சி தொடர, தமிழகத்தில் மாற்றங்கள் வர நாங்கள் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறினார்.

இந்த முடிவுக்கு பிறகு தமிழகத்தில் 60 ஆண்டுகளாக ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களுக்கு ஒரு வெறுப்பான சூழல் உள்ளது. தமிழகத்தில் மக்களுக்கு மாற்றம் வர வேண்டும் என எண்ணம் ஆழமாக உள்ளது. அதனை பூர்த்தி செய்ய இந்த நிலையை எடுத்துள்ளோம். எங்கள் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமில்லை, இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெறும். மோடி 3வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என கூறினார். 

தமிழக அரசியலில் மாற்றம்

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, தமிழகத்தின் அரசியல் நேற்றிரவில் இருந்து மாறியுள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாற்று அரசியலை கொண்டுவர துடித்துக் கொண்டிருப்பவர். எனவே நாடாளுமன்ற தேர்தலில் மக்களை நம்பி வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம். சேலத்தில் இன்று நடைபெற்கின்ற பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் பிரதமர் மோடியுடன் ராமதாஸ், அன்புமணி பங்கேற்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என தெரிவித்தார். மேலும் பாமகவுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த தலைவராக ராமதாஸ் இருப்பார் என அண்ணாமலை தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

Bjp Pmk Alliance : ராமதாஸை சந்தித்த அண்ணாமலை... பாமகவிற்கு 10 தொகுதி ஒதுக்கீடு

click me!