Tamilisai : தேர்தல் அரசியலில் மீண்டும் ரீ- எண்ட்ரி.. தமிழிசை சௌந்தரராஜன் கடந்து வந்த அரசியல் பாதை..

By Ramya s  |  First Published Mar 18, 2024, 3:01 PM IST

தமிழிசை சௌந்தரரான்  இன்று தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அவர் மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழிசையின் அரசியல் பயணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


காங்கிரஸ் மூத்த தலைவர் குமரின் ஆனந்தனின் மகள் தான் தமிழிசை சௌந்தரராஜன். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த தமிழிசை சிறு வயதில் இருந்து படிப்பில் சிறந்து விளங்கி உள்ளார். தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பிஎஸ் பட்டமும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் டி.ஜி.ஓ பட்டமும் பெற்றார் தமிழிசை. பின்னர் கனடாவில் மருத்துவ பயிற்சி பெற்றார்.

இளங்கலை மருத்துவ படிப்பு பயிலும் போது சௌந்தர ராஜனை திருமணம் செய்து கொண்டார் தமிழிசை. எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது தான் தமிழிசையின் திருமணம் நடந்தது. தமிழகத்தில் இரு பெரும் அரசியல் ஆளுமைகளான எம்.ஜி.ஆர், கருணாநிதி இருவரின் தலைமையில் தமிழிசையின் திருமணம் நடைபெற்றது. 

Tap to resize

Latest Videos

திடீர் ட்விஸ்ட்.. பாமகவோடு கூட்டணி பேச்சுவார்த்தையை நிறுத்திய அதிமுக.! சேலத்தில் மோடியோடு மேடையேறும் அன்புமணி?

ஆரம்ப முதலே தமிழிசைக்கு அரசியலில் ஆர்வம் இருந்துள்ளது. அவர் முதலில் காங்கிரஸில் சேரவே விருப்பம் தெரிவிக்கவே, அது வாரிசு அரசியலுக்கு வழி வகுக்கும் என்று அவரின் தந்தை குமரி அனந்தன் மறுப்பு தெரிவித்துள்ளார். 

அப்போது தான் பாஜகவும் தேசிய அளவில் வளர்ந்து வந்தது. வாஜ்பாயின் மீது இருந்த ஈர்ப்பு, மரியாதையால் 1999-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார் தமிழிசை. காங்கிரஸுக்கு நேரதிர் சித்தாந்தம் கொண்ட பாஜகவில் தனது மகள் இணைந்தது குமரி அனந்தனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால்  நீண்ட காலம் அவர் தமிழிசை உடன் பேசவில்லை.

ஆனால் மறுபுறம் பாஜகவில் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய தமிழிசை படிப்படியாக முன்னெற தொடங்கினார். 2001-ம் ஆண்டு பாஜகவின் மாநில மருத்துவ செயலாளராக நியமிக்கப்ப்ட்டார். பின்னர் 20025-ம் ஆண்டு தேசிய மருத்துவ அணி செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.  பின்னர் 2010-ம் ஆண்டு தமிழக பாஜக மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்ட அவர் 2013-ம் ஆண்டு பாஜக தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் 2014-ம் ஆண்டு தமிழக பாஜக தலைவரானார் தமிழிசை சௌந்தரராஜன். தமிழகத்தில் பாஜக பிரபலமடைவதற்கு தமிழிசையும் முக்கிய காரணமாக இருந்தார். குறிப்பாக தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தரும் என்ற தமிழிசையின் வார்த்தை மிகப்பிரபலமானது. அரசியலை தாண்டி தனிப்பட்ட முறையில் பல விமர்சனங்களையும் ட்ரோல்களையும் அசால்ட்டாக கடந்து வந்தார் தமிழிசை.

தமிழக சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தலில் 5 முறை போட்டியிட்ட அவர் ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை. அந்த வகையில் எனினும் மனம் தளராமல் பொது வாழ்வில் ஈடுபட்டு வந்தார். 

தமிழிசையின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் பாஜக தலைமை அவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டார். அவருக்கு கூடுதல் பொறுப்பாக 2021-ம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். 

நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங், விசிக, கம்யூனிஸ்ட் களம் இறங்கவுள்ள தொகுதிகள் எது.? வெளியான இறுதி பட்டியல்

இந்த சூழலில் புதுச்சேரி, தெலங்கானா மாநில ஆளுநர் பதவிகளை தமிழிசை ராஜினாமா செய்துள்ளார். வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காகவே அவர் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி புதுச்சேரி மக்களவை தொகுதியில் அவர் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. புதுச்சேரியை பொறுத்தவரை புதுச்சேரி மக்களுக்கு நன்கு அறிமுகமானவராக தமிழிசை இருக்கிறார். இதனால் புதுச்சேரியில் அவரை களமிறக்கினால் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என்று பாஜக நம்புவதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதி தமிழிசையின் சொந்த தொகுதி என்பதால் அங்கும் அவர் களமிறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலு தென் சென்னை, விருதுநகர், நெல்லை போன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் தமிழிசை போட்டியிடலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. எனினும் தமிழிசை எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியான பின்னரே தெரியவரும்.

click me!