நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக இணைந்ததற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாமக-பாஜக கூட்டணி
நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாஜக தனது கூட்டணியை இறுதி செய்து வருகிறது. அந்த வகையில் பாமகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இன்று காலை தொகுதி பங்கீடு ஏற்பட்டுள்ளது. இன்று காலை திண்டிவனத்தில் உள்ள பாமக நிறுனவர் ராமதாஸ் இல்லம் அமைந்துள்ள தைலாபுரம் இல்லத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் எல்.முருகன் வந்தனர். இதனையடுத்து தொகுதி உடன்பாடு ஏற்பட்டிருப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.பாமகவிற்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாஜகவுடன் கூட்டணி ஏன்.?
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, நாட்டின் நலன் கருதி மோடியின் நல்லாட்சி தொடர, தமிழகத்தில் மாற்றங்கள் வர முடிவு எடுத்துள்ளதாக கூறினார். தமிழகத்தில் 60 ஆண்டுகளாக ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பான சூழல் உள்ளது. தமிழகத்தில் மக்களுக்கு மாற்றம் வர வேண்டும் என எண்ணம் உள்ளது. அதனை பூர்த்தி செய்ய இந்த நிலையை எடுத்துள்ளோம். எங்கள் கூட்டணி இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெறும். மோடி 3வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என கூறினார்.
இதையும் படியுங்கள்
PMK ALLIANCE : பாஜக கூட்டணியில் பாமகவிற்கு ஒதுக்கப்படவுள்ள 10 இடங்கள் என்ன.? உத்தேச பட்டியல் இதோ