நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புறீங்களா.? துரைமுருகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

By Ajmal Khan  |  First Published Feb 15, 2024, 3:23 PM IST

நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட விரும்புவோர்கள் வருகிற 19 ஆம் தேதி முதல் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் 50ஆயிரம் என நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. 
 


சூடு பிடிக்கும் தேர்தல் களம்

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில், மார்ச் மாதம் மத்தியில் தேர்தில் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்தநிலையில் அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தமிழகத்தை பொறுத்துவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகிவருகிறது. திமுகவை பொறுத்தவரை தங்களது கூட்டணி கட்சியோடு முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கவுள்ளது. இந்தநிலையில் திமுக சார்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

விருப்பமனு தேதி அறிவிப்பு

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வருகிற 19-2-2024 முதல் அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும்  போட்டியிட விரும்புகின்ற கழகத் தோழர்கள் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து, 1-3-2024 முதல் 7-3-2024 மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும் வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம்  50,000/- எனவும், விண்ணப்ப படிவத்தை தலைமைக் கழகத்தில் ரூ.2,000/-வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

Electrol Bond: தேர்தல் பத்திரமுறை ரத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு

click me!