நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட்ட உள்ளதால் தமிழக அரசியல் களம் விறுவிறுப்பை எட்டியுள்ளது. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த இரண்டு முறை அரக்கோணம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெகத்ரட்சகனுக்கு பதிலாக இந்த முறை ராணிப்பேட்டை மாவட்ட பொருளாளர் ஏ.வி.சாரதி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட்ட உள்ளதால் தமிழக அரசியல் களம் விறுவிறுப்பை எட்டியுள்ளது. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் தேர்தல் வாக்குறுதி அறிக்கை பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன.
இந்நிலையில் பிரதான கட்சிகள் தரப்பில் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகளில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அரக்கோணம் தொகுதியில் திமுகவின் வேட்பாளராக யார் நிறுத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், திமுகவின் முக்கிய பிரமுகரும், பணம் பலம் கொண்ட எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு மாற்றாக அரக்கோணத்தில் ஏ.வி. சாரதிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியை சேர்ந்த ஏ.வி. சாரதி சிமெண்ட் மொத்த வியாபாரம், குவாரி பணிகள் ஆகியவற்றை செய்து வருகிறார். தற்போது திமுகவின் ராணிப்பேட்டை மாவட்ட பொருளாளராக பதவி வகித்து வருகிறார். மக்கள் மத்தியில் மிகவும் பரீட்சயமானவர். குறிப்பாக திமுக தலைமையுடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.
அதேநேரம், அமைச்சர் காந்தியின் மகன் வினோத்தின் பெயரும் அரக்கோணம் தொகுதி வேட்பாளர் பெயரில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், நெசவாளர்களின் நலுனுக்காக, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக செயல்பட்டு வரும் கைத்தறி துறையில், அமைச்சரின் மகன் என்ற தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் செய்துள்ளதாக அண்ணாமலை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். ஆகையால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவது சந்தேகமே.
அதேநேரம், அரக்கோணம் தொகுதியில் பெரும்பான்மை மக்கள் வன்னியர்கள் என்பதால், அதே சமூகத்தைச் சேர்ந்த ஏ.வி.சாரதியை நிறுத்தினால் கூடுதல் பலமாக இருக்கும் என்று கட்சித் தலைமை நினைக்கிறது. மேலும், பாமக அந்த தொகுதியில் நிற்கும் பட்சத்தில் எதிர்க்க சரியான ஆளாகாவும் இவர் இருப்பார்கள் என கூறப்படுகிறது. ஆகையால் ஏவி சாரதியே அரக்கோணம் மக்களவை தொகுதி வேட்பாளராக களமறிங்க அதிக வாய்ப்புள்ளததாக கூறப்படுகிறது.
அரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகன் போட்டியிடாத பட்சத்தில் ஓரம்கட்டப்படுகிறாரா அல்லது வேலூர் தொகுதிக்கு மாற்றப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரதத்தில் வேலூர் தொகுதிக்கு அவர் மாற்றப்பட்டும் பட்சத்தில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நிலை என்ன இதுபோன்ற பல்வேறு கேள்விகள் நிலவி வரும் பட்சத்தில் இதற்கு விரைவில் விடை தெரியும்.