தேர்தல் தேதி அறிவித்ததற்கு பிறகு, மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து அறிவிப்பு. அமைச்சர் தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Jan 13, 2021, 1:45 PM IST
Highlights

நேற்று 10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்பட்ட  நிலையில் மாணவர்களுக்கு எந்த எந்த பாடத்திட்டங்கள் நடத்துவது என்பது குறித்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவித்ததற்கு பிறகு, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வுகள் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள ஏளுரில்  பயணிகளுக்கு இலவச ஆடு வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்நித்த அவர் கூறியதாவது: நேற்று 10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்பட்ட  நிலையில் மாணவர்களுக்கு எந்த எந்த பாடத்திட்டங்கள் நடத்துவது என்பது குறித்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அட்டவணை மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல்  தேதி அறிவிதத்திற்கு பிறகு பொது தேர்வுகள் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும். 

தமிழக முதலமைச்சர் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி திறப்பு குறித்து ஆணை வாங்கியுள்ளார். சுகாதாரத் துறை அறிவுரை மற்றும் ஆலோசனைகளின்படி பள்ளிகள் செயல்படும். விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம், ஆனால்  98 சதவிகித மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்ப சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து பள்ளிகள் திறகப்பட்டுள்ளது.மாணவர்களை பாதுகாக்க அனைத்து அறிவுரைகளையும் முதலமைச்சர் வழங்கியுள்ளார் அதன்படி பள்ளிகள் செயல்படும் .தனியார் பள்ளிகளில் கட்டாய  கட்டண வசூல் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். 

பேருந்து இலவச பயண அட்டை இல்லை என்றாலும் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் பயணிக்கலாம். முதல் கட்டமாக 10,12 வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளது, சூழ்நிலைக்கேற்ப பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 6029 பள்ளிகள் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

 

click me!