திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி.. ஸ்டாலின் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்பு.. அலறும் எடப்பாடி

Published : Jan 13, 2021, 12:33 PM IST
திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி.. ஸ்டாலின் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்பு.. அலறும் எடப்பாடி

சுருக்கம்

பச்சை துண்டு போட்டுகொண்டு விவசாயிகளுக்கு எடப்பாடி பழனிசாமி பச்சை துரோகம் செய்து வருகிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

பச்சை துண்டு போட்டுகொண்டு விவசாயிகளுக்கு எடப்பாடி பழனிசாமி பச்சை துரோகம் செய்து வருகிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பஞ்செட்டி கிராமத்தில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டர். இவ்விழாவில் அங்கு அமைக்கப்பட்டிருக்கக்கூடிய பொங்கல் பானையில் ஸ்டாலின், நிர்வாகிகள் சேர்ந்து பொங்கல் வைத்தனர். இதன் தொடர்ச்சியாக  பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 

இதனையடுத்து பேசிய மு.க.ஸ்டாலின்;- பச்சை துண்டு போட்டுகொண்டு விவசாயிகளுக்கு எடப்பாடி பழனிசாமி பச்சை துரோகம் செய்து வருகிறார். ரூ.7 ஆயிரம் கோடி கூட்டுறவு கடன் திமுக ஆட்சியில் தான் தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த உடன்  அனைத்து விவசாயக்கடன்களும் ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். மேலும் நீதிமன்றம் உத்தரவிட்டும் விவசாயிகள் கடனை ரத்து செய்யமுடியாது என அதிமுக அரசு மறுத்துவிட்டது என ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். குடியரசு தலைவருக்கு அனுப்பிய அதிமுக ஊழல் பட்டியல் என்னவானது என தெரியவில்லை. ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வை நுழையவிடவில்லை என்றார். 

அண்மையில் ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய மு.க ஸ்டாலின், திமுக ஆட்சி அமைத்தவுடன் முதலில் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்றும் 100 நாட்கள் வேலை திட்டம் உயர்த்தப்படும் என தெரிவித்திருந்தார். அதேபோல், நேற்று கொளத்தூரில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் திமுக ஆட்சிக்கு வந்ததும் 234 தொகுதிகளிலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி அமைக்கப்படும் என கூறியிருந்தார் என்பது குறிப்பித்தக்கது.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!