4 நாட்களில் 20,074 பேர் வேட்பு மனு தாக்கல்… பரபரக்கும் உள்ளாட்சி தேர்தல் நிலவரம்

By manimegalai aFirst Published Sep 18, 2021, 9:10 PM IST
Highlights

தமிழகத்தில் நான்கே நாட்களில் கிட்டத்தட்ட 20, 074 பேர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை:  தமிழகத்தில் நான்கே நாட்களில் கிட்டத்தட்ட 20, 074 பேர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஆங்காங்கே படு சுறுசுறுப்புடன் நடைபெற்று வருகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இந் நிலையில் தமிழகத்தில் 4 நாட்களில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மொத்தம் 20,074 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இன்று 4வது நாள் என்பதால் கிராமப்புற ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 5372 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கின்றனர். ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 940 பேர், ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு 207 பேர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 13 பேர்  என மொத்தமாக 6,532 பேர் மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.

வேட்பு மனுக்கள் தாக்கலுக்கு வரும் 22ம் தேதி கடைசி நாள் என்பதால் அடுத்து வரக்கூடிய நாட்களில் மனுக்கள் அதிக எண்ணிக்கையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 25ம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

click me!