சித்துவின் சித்து விளையாட்டில் சிக்கிய அமரீந்தர் சிங்.. காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் முழுக்கு?

By vinoth kumarFirst Published Sep 18, 2021, 8:34 PM IST
Highlights

முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தேன். எனக்கு தெரியாமல், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடப்பது மூன்றாவது முறை. இதனால், பதவி விலக முடிவு செய்தேன். தங்களுக்கு நம்பிக்கைக்குரிய யாரை வேண்டுமானாலும் கட்சி மேலிடம் முதல்வர் பதவியில் அமர்த்தட்டும். 

வரும் சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நவ்ஜோத்  சிங் சித்து பெயரை முன்மொழிந்தாள் எதிர்பேன் என அமரீந்தர் சிங் அதிரடி கூறியுள்ளார்.

இன்னும் 5 மாதங்களில் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரசில் உட்கட்சி மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக நவ்ஜோத்  சிங் சித்துவுக்கும், முதல்வர் அமரீந்தர் சிங்கை  தனிப்பட்ட முறையில்  விமர்சனம் செய்து வந்தார். அமரீந்தர் சிங்கை மாற்ற வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கினர். 

ஆகையால், காங்கிரஸ் மேலிடம் தன்னை அவமானப்படுத்திவிட்டதாக கருதிய முதல்வர் அமரீந்தர் சிங் ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமரீந்தர் சிங்;- தற்போது நான் காங்கிரஸ் கட்சியில் உள்ளேன். எதிர்கால நடவடிக்கை குறித்து எனது ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முடிவு செய்வேன். சமீபத்திய நிகழ்வுகள் என்னை அவமானப்படுத்துவது போல் உள்ளது. இன்று காலை காங்கிரஸ் தலைவரிடம் பேசினேன். 

அப்போது, முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தேன். எனக்கு தெரியாமல், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடப்பது மூன்றாவது முறை. இதனால், பதவி விலக முடிவு செய்தேன். தங்களுக்கு நம்பிக்கைக்குரிய யாரை வேண்டுமானாலும் கட்சி மேலிடம் முதல்வர் பதவியில் அமர்த்தட்டும். நேரம் வரும் போது எனக்கு முன் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் பரிசீலனை செய்வேன் என அமரீந்தர் சிங் தெரிவித்தார். 

மேலும், நவ்ஜோத்  சிங் சித்து காங்கிரஸ் கட்சிக்கு  பேரழிவாக இருக்க போகிறார். அடுத்த முதல்வர் முகத்திற்கு  சித்து பெயரை முன்மொழிந்தாள் எதிர்பேன். சித்துக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளது. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கும் என அமரீந்தர் சிங் குற்றம்சாட்டியுள்ளார். 

click me!