முதல்வர் பதவி ராஜினாமாவுக்கு பின்… அம்ரீந்தர் சிங் சொன்ன ‘ஒத்த’ வார்த்தை…

By manimegalai aFirst Published Sep 18, 2021, 8:26 PM IST
Highlights

தான் அவமானப்பட்டதாக உணர்ந்ததால் தான் பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அம்ரீந்தர் சிங் கூறி உள்ளார்.

சண்டிகர்: தான் அவமானப்பட்டதாக உணர்ந்ததால் தான் பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அம்ரீந்தர் சிங் கூறி உள்ளார்.

2024ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலை நோக்கி காங்கிரஸ் சிந்தித்து வரும் நிலையில் உள்கட்சி மோதல் அம்மாநிலம் ஆளும் முதல்வரையே காலி செய்துவிட்டது. பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சராக அம்ரீந்தர் சிங் பதவி வகித்து வந்தார். அடுத்தாண்டு இந்த மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

ஆனால் கட்சியின் மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், அம்ரீந்தர் சிங்குக்கும் ஏழாம் பொருத்தம். இருவருக்குமான லடாயை சோனியாவும், ராகுலும் தலையிட்டு தீர்த்தாலும் பிரச்னை ஓய்ந்ததாக தெரியவில்லை. பொறுத்து, பொறுத்து பார்த்த அம்ரீந்தர் சிங் முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து கட்சி மேலிடத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தார்.

காங்கிரசுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டாலும் தான் ஏன் ராஜினாமா செய்தேன் என்பதை விளக்கி இருக்கிறார் அம்ரீந்தர். முதல்வர் பதவி ராஜினாமாவுக்கு பின்னர் செய்தியாளர்களை அம்ரீந்தர் சிங் சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: இன்று காலை கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் நான் பேசினேன். அப்போது முதலமைச்சர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்ய போவதாக கூறினேன். எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கிறது என்பது எனக்கு தெரியாமல் இருப்பது இது 3வது முறை.

எனது தலைமை கேள்விக்குறியாக்கிப்பட்டு உள்ளது. கட்சியில் இருந்து விலகும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் எதிர்கால அரசியலில் தம் முன்னால் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் நான் பரிசீலனை செய்வேன் என்று கூறினார்.

click me!