
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானை இழிவாக பேசிய தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவை கண்டித்து ட்விட்டரில் #whoisbalakrishna என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டிங்கில் உள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானை இழிவுபடுத்திப் பேசியது சமூக ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது. ஒரு தனியார் தெலுங்கு ஊடகத்திற்கு பேட்டியளித்த நடிகர் பாலகிருஷ்ணா, ஏ.ஆர். ரஹ்மான் என்பவர் ஆஸ்கர் விருது வாங்கி இருக்கலாம், ஆனால் அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்றும், பாரத ரத்னா போன்ற விருதுகள் என்.டி.ஆரின் கால் விரலுக்கு சமம் என்றும் பேசியுள்ளார்.
மேலும் எந்தவொரு உயரிய விருதும் தன்னுடைய குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது, என்றும் பாலகிருஷ்ணா அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு முன்னணி நடிகராக இருந்து கொண்டு இவ்வாறு பேசுவது ஏற்றுக்கொள்ள கூடிய விஷயம் அல்ல. ரஹ்மான் என்றால் ஆஸ்கார் விருது வாங்கியது நினைவிற்கு வருவது போல பாலகிருஷ்ணா என்றால் மலைமீது ஏறி முயலை காப்பாற்றுவது, பறந்தே பாகிஸ்தான் போவது இதுதான் நியாபகம் வருகிறது என்று கலாய்த்து வருகின்றனர்.
இன்னும் ஒருசிலர் உனக்கு எங்க ஊரு பவர் ஸ்டார் பரவால்ல என்று கூறி மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர். மேலும் ட்விட்டரில் who is balakrishna என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டிங்கில் உள்ளது.