
ஊழல்வாதிகளுக்கும் தவறானவர்களுக்கும் என் இயக்கத்தில் இடமில்லை என கமல் உறுதியாக கூறியுள்ளார்.
கமலின் 63-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்தார் கமல்.
தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறியுள்ள கமல், அதற்கான முன்னோட்டமாக “மையம் விசில்” என்ற செயலியை அறிமுகப்படுத்தினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு கமல் பதிலளித்தார். அப்போது, ஊழல்வாதிகளுக்கும் தவறானவர்களுக்கும் தன் இயக்கத்தில் இடமில்லை எனவும் அப்படியானவர்கள் தன் இயக்கத்தில் இருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.