கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு பெயர் கேட்காதீர்கள்... உவமையில் பதில் கொடுத்த கமல்..!

 
Published : Nov 07, 2017, 02:21 PM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு பெயர் கேட்காதீர்கள்... உவமையில் பதில் கொடுத்த கமல்..!

சுருக்கம்

kamal hassan speech in press meet

நடிகர் கமலஹாசன் தற்போது தி.நகரில் உள்ள GRT ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். மேலும் பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் கொடுத்து வருகிறார்.

அப்போது பேசிய கமல்ஹாசன், தற்போது நான் அரசியலுக்கு வரத் தயாராகி வருவதாகவும். அரசியல் களம் குறித்து பல அறிஞர்களுடன் விவாதித்த பின் அது குறித்து அறிவிப்பேன் எனவும் தெரிவித்தார்.

இதற்கு ஒரு உவமையாக கர்ப்பத்தில் குழந்தை இருக்கும் போதே அதற்கு பெயர் கேட்காதீர்கள். நான் அரசியல் பற்றி தெரிந்து கொள்ளவும் அதுகுறித்து ஆராயவும் சில காலம் தேவைப்படுவதால். சில நாட்கள் கழித்து அரசியல் கட்சி குறித்தும் அதன் பெயர் போன்றவற்றையும் அறிவிப்பேன் என தெரிவித்தார்.

இதன் மூலம் கமல் ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டிருந்தாலும். அரசியலில் இறங்கும் ஆயத்தப் பணியில் தான் அவர் உள்ளார் என்று தெரிகிறது.

 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!