Chennai floods: தூக்கமும் இல்ல.. ஓய்வும் இல்ல.. கட்டுப்பாட்டு அறையே கதியாக கிடந்த அமைச்சர் செந்தில் பாலாஜி..

By Ezhilarasan BabuFirst Published Nov 9, 2021, 10:37 AM IST
Highlights

அடுத்தாண்டு மழை காலம் வரும் சமயங்களில் மின் வினியோகம் தடைபடுவதற்கான வாய்ப்பே இருக்காது, கடந்த காலத்தைக் காட்டிலும் தற்போது மின் வினியோகம் தொடர்பான எண்ணிக்கையும் குறைந்துள்ளது, 24 மணி நேரமும் மின் வாரிய அதிகாரிகளும், பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

ஒரு சில இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியே மின் சப்ளை நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்றும் அடுத்த ஆண்டு மழை காலத்தில் மினி விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்பே இருக்காது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகள்  உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் சென்னை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட 223 மின் மாற்றிகளில் ஒரு மின் மாற்றியில் மட்டும் சப்ளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.என்றும் பொது மக்களின் பாதுகாப்பு கருதியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதே நேரத்தில் சென்னையில் மழை பெய்ய தொடங்கியது முதல் அமைச்சர் செந்தில் பாலாஜி இரவு பகல் பாராமல் தொடர்ந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருவதுடன், கட்டுப்பாட்டை அறையிலேயே முகாமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து பணியினை மேற்கொள்ளும் வருகின்றனர். 

வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது, கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது, விடிய விடிய பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. தமிழக முதலமைச்சர் உட்பட அனைத்து அரசு இயந்திரங்களும் நிவாரணப் பணிகள் மற்றும் வெள்ள பாதிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், தொடர் மழை வெள்ளம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது, சென்னையை பொருத்தவரையில் சென்னை  மின்பகிர்மான வட்டத்திற் குட்பட்ட 223 மின் மாற்றிகளில்  ஒரு மின் மாற்றியில் மட்டும் மின் சப்ளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, இதனால் நேற்று முன்தினம் இரவு ஆய்வுப் பணிகளை துவங்கிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று அதிகாலை வரை விடிய விடிய மின் சீரமைப்பு பணிகளை கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. 

சென்னையில் உள்ள மின் பகிர்ந்தளிப்பு கட்டுப்பாட்டு அறையிலேயே அவர் இருந்தபடி பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை கேட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார், அதேபோல் பல்வேறு துணை மின் நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அவர் அசோக் நகர் துணை மின் நிலைய வளாகத்தில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த துணை மின் நிலையத்தால் கே.கே நகர், அசோக் நகர், மேற்கு மாம்பலம் ஆகிய பகுதிகளில் உள்ள 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறுகின்றனர். இந்த பகுதிகளில் மழைநீர் தேக்கம் காரணமாக மின் தடை ஏதும் ஏற்பட்டுள்ளதா, ஏதும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதா என அதிகாரியிடம் கேட்டு வருகிறேன், சென்னையில் மொத்தம் 223 துணை மின் நிலையங்கள் உள்ளன அதில் 222 துணை மின் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன, தொடர் மழை பெய்து வருவதன் காரணமாகவே மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. 1757 ஸ்பீடகர்கள் பயன்பாட்டில் உள்ளன  அதில் 18 ஸ்பீடர்கள் மழையினால் பாதிக்கபட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் 8 ஸ்பீடர்கள் சரி செய்யப்பட்டுள்ளது, 10 ஸ்பீடர்கள் விரைவில் சரி செய்யப்படும், கடந்த காலங்களைப் போல் இல்லாமல் புகார் வந்தபின் சரிசெய்யாமல் பாதிப்பு உள்ளதை கண்டறிந்து முன்கூட்டியே சரி செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

அடுத்தாண்டு மழை காலம் வரும் சமயங்களில் மின் வினியோகம் தடைபடுவதற்கான வாய்ப்பே இருக்காது, கடந்த காலத்தைக் காட்டிலும் தற்போது மின் வினியோகம் தொடர்பான எண்ணிக்கையும் குறைந்துள்ளது, 24 மணி நேரமும் மின் வாரிய அதிகாரிகளும், பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மழைநீர் தேக்கம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர், இதுவரை மீன் பாதிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, இந்த மழைக் காலத்தில் பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார். தொடர்ந்து பல மணி நேரம் ஓய்வின்றி அமைச்சர் செந்தில் பாலாஜி கட்டுப்பாட்டு அறையிலும் முகாமிட்டு வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. தேங்கி நிற்கும் மழை வெள்ளத்தில் தமிழக முதல்வர் இறங்கி மக்களுக்கு நிவாரண பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அமைச்சர்களும் சுற்றி சுழன்று வருவது குறிப்பிட தக்கது. 
 

click me!