அதிமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை: திமுக கற்பூரம் போல் கரைகிறது, அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி சரவெடி.

By Ezhilarasan BabuFirst Published Aug 25, 2020, 2:17 PM IST
Highlights

 தன் கூட இருப்பவர்களை ஒழுங்காக வைத்துக்கொள்ள தெரியாதவர் ஸ்டாலின், திமுக கற்பூரம் போல கரைந்து கொண்டு வருகிறது

அனைவரையும் ஒருங்கிணைத்து செல்லும் நோக்குடன் அதிமுக உள்ளது என்றும், தற்போது இருக்கிற கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என அமைச்சர் ஜெயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.  

சென்னை இராயபுரம் பகுதியில் தனியார் தொண்டு நிறுவனம் மேற்கொண்ட கொரோன விழிப்புணர்வு நிகழ்சியில் பங்கேற்று ஏழை எளிய மக்களுக்கு முககவசங்களை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் பேசியதாவது:- விஜயகாந்த் அவர்கள் மக்களுக்கு சிறந்த முறையில் தொண்டாற்ற பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அரசும் தொண்டு நிறுவனங்களும் மக்களும் ஒருங்கினைந்து செயலாற்றுவதன் மூலம் கொரோனவை வெல்ல முடியும்.

பிரேமலதா விஜயகாந்த அவர்களின்  கருத்தை குதற்கமாகவோ, கூட்டணிக்குள் பிளவு ஏற்படுத்தும் விதமாகவோ எடுத்து கொள்ள முடியாது.அனைவரையும் ஒருங்கிணைத்து செல்லும் நோக்குடன் அதிமுக இருக்கிறது. தற்போது கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை, ஜெயலலிதா காலத்தில் எப்படி இருந்ததோ அதே போல் அதிமுக தற்போது இயங்கி வருகிறது. வரும் காலத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றார், கூட்டணி கட்சிகளின் முரண்பாடுகள் பேரறிஞர் அண்ணா காலம் தொட்டே இருந்து வருகிறது. சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் தேர்தல் நேரத்தில் சரியாகிவிடும். வாக்குகளை பெறுவதற்கான நாடாகமாகவே உதய நிதி டிவிட்டரில் விநாயகர் சிலை போஸ்ட் செய்துள்ளார். நடிக்க வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை. மதநல்லிணக்கம் மட்டுமே அதிமுகவின் நிலைப்பாடு, 

எனவே அதிமுக அரசை மக்கள் அங்கீகரித்துள்ளனர்.  தேர்தல் நேரத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி மட்டுமே அமையும், நேற்று இருந்த சூழல் வேறு, இன்றைய சூழல் வேறு, நாளைய சூழல் வேறு, சூழ்நிலைகள் மாறும் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அனைவரையும் அரவணைத்து செல்லும் மனப்பான்மையால் யாரும் எங்களை விட்டு போகமாட்டார்கள். தன் கூட இருப்பவர்களை ஒழுங்காக வைத்துக்கொள்ள தெரியாதவர் ஸ்டாலின், அவரது செயல்பாடுகாளால் திமுக கற்பூரம் போல கரைந்து கொண்டு வருகிறது. குட்கா தொடர்பான உயர்நீதிமன்ற வழங்கிய  தீர்ப்பை விமர்சிக்க கூடாது. தீர்ப்பு குறித்த அடுத்தகட்ட நகர்வு குறித்து சட்டமன்ற பேரவை முடிவு செய்யும் என்றார்.

 

click me!