சபாநாயகருக்கு விழுந்த அடி இந்த தீர்ப்பு..!! குட்கா வழக்கில் அதிமுகவை எகிற அடித்த ஆர்.எஸ் பாரதி..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 25, 2020, 2:02 PM IST
Highlights

சபாநாயகருக்கு கொடுக்கப்பட்ட அடி  இந்த குட்கா  தீர்ப்பு என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

சபாநாயகருக்கு கொடுக்கப்பட்ட அடி  இந்த குட்கா  தீர்ப்பு என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார். 
சட்டமன்றத்திற்குள் திமுக எம்எல்ஏக்கள் குட்கா எடுத்து சென்றதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து திமுகவின் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 21 சட்டமன்ற உறுப்பினர் உரிமை மீறல் நோட்ஸ் வழக்கில் தடை செய்யப்பட்ட பொருளில் குட்க வரவில்லை,

 

எனவே அதை சட்டமன்றத்திற்கு எடுத்துசென்றது தப்பு இல்லை என்று கூறியுள்ளனர். தமிழக அரசு அவசர கோலத்தில் இந்த வழக்கை தொடுத்தது. சட்டமன்றத்தில் அதிமுக பலம் குறைந்த காரணத்தால் ஒரு மைனாரிட்டி அரசை காக்க ஒரு தவறான எண்ணத்தில் இந்த முடிவை சபாநாயகர் எடுத்தார். திமுக உரிய சட்டநடவடிக்கை எடுத்து உரிய தீர்ப்பை பெற்றுள்ளது. சபாநாயகருக்கு வழங்கபட்ட ஒரு அடி இந்த தீர்ப்பு,
மேற்கொண்டு ஏதாவது இருந்தால் நோட்டீஸ் அனுப்பலாம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். 

ஆனால் அப்படி அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குட்காவை கொண்டு வந்ததை தவிர வேரூ எதுவும் நடந்ததாக நோட்டீஸில் எதுவும் கொடுக்கப்படவில்லை. குட்கா விற்பனை விவகாரத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. 570 கோடி பறிமுதல் செய்த அந்த வழக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை? குட்கா விவகாரத்தில் அதுபோல பல ஆதாரங்கள் கிடைத்தது, இந்த விவகாரமும் இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது என்றார் அவர். 
 

click me!