கடிதமெல்லாம் இல்லை.. நேரடியாக மத்திய அமைச்சருக்கு தொலைபேசியில் கோரிக்கை வைத்த ஸ்டாலின்.. அதிரடி ஆரம்பம்.

By Ezhilarasan BabuFirst Published May 10, 2021, 12:53 PM IST
Highlights

தமிழ்நாட்டில் தற்போது ஒரு லட்சத்து 45 ஆயிரம் பேர் கொரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்தை தேவையான அளவிற்கு கொள்முதல் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. 

தமிழ்நாட்டில் தற்போது ஒரு லட்சத்து 45 ஆயிரம் பேர் கொரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்தை தேவையான அளவிற்கு கொள்முதல் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளிலும் 6 பெரு நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டு வருகின்றது. 

அனைத்து மாநிலங்களுக்கும் இந்த மருந்துக்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி தமிழ்நாட்டிற்கு இதுவரை 2 லட்சத்து 5 ஆயிரம் குப்பிகள் அதாவது நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் குப்பிகள் என்ற குறைந்த அளவிலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் தேவைக்கு இது போதுமானதாக இல்லை என்பதால் இந்த ஒதுக்கீட்டை உடனடியாக உயர்த்தித் தரவேண்டும் என மாண்புமிகு இந்திய ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திரு.பியூஸ் கோயல் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். 

நாள் ஒன்றுக்கு தமிழகத்திற்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்தை ஒதுக்கீடு செய்யுமாறும், அவ்வாறு செய்தால் மட்டுமே தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தேவையை முழுமையாக நிறைவு செய்ய முடியும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார்கள். மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்களும் இந்த கோரிக்கை குறித்து பரிசீலித்து ஆவன செய்வதாக உறுதி அளித்துள்ளார்கள்.
 

click me!