500 குவார்ட்டர் பாட்டில்கள் பதுக்கல்.. அதிமுக முன்னாள் அமைச்சரின் தம்பி அதிரடி கைது..!

Published : May 10, 2021, 12:52 PM ISTUpdated : May 10, 2021, 12:59 PM IST
500 குவார்ட்டர் பாட்டில்கள் பதுக்கல்.. அதிமுக முன்னாள் அமைச்சரின் தம்பி அதிரடி கைது..!

சுருக்கம்

திருச்சியில் கூடுதல் விலைக்கு விற்க வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதியின் தம்பி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சியில் கூடுதல் விலைக்கு விற்க வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதியின் தம்பி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா நோய்த் தொற்று அதிகமாக பரவிவரும் நிலையில், இன்று முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுபான கடைகளை முழுமையாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஒரு சிலர் அரசு மதுபான கடைகளில் மொத்தமாக மதுபானங்களை வாங்கி, பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ய வீடுகளில் வாங்கி பதுக்கி வைத்துள்ளனர். 

இந்நிலையில் திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்த மனோகரன் (40) என்பவர், ஊரடங்கு நேரத்தில் கூடுதல் விலைக்கு விற்க மதுபாட்டில்களை வாங்கி வந்து தனது வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். 

இந்த சோதனையின் போது, வீட்டில் 500 குவார்ட்டர் பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மனோகரனை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், முன்னாள் அமைச்சர் வளர்மதியின் தம்பி என்பதும், கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?