தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்றுக்கொண்டார்..

By Ezhilarasan BabuFirst Published May 10, 2021, 11:52 AM IST
Highlights

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்றுக்கொண்டார். சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சி எளிமையான முறையில் நடைபெற்றது. 

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்றுக்கொண்டார்.சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சி எளிமையான முறையில் நடைபெற்றது.  2021ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் 'திராவிட முன்னேற்ற கழகம்' கூட்டணிகளோடு 159 இடங்களிலும், உதயசூரியன் சின்னத்தில் 133 இடங்களிலும் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் கடந்த 7ம் தேதி ஆட்சி பொறுப்பெற்றது. 

தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்றவுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டார்கள். இந்நிலையில், முதல் அமைச்சரவை கூட்டம் நேற்றுய தினம் தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிலையில் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை காலை 10:00 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், புதிதாக பதவியேற்கவுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க  சபாநாயகர் தேவை என்பதால், தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி இன்று ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில்  பதவியேற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் , தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் , தமிழக தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அமைச்சகர்கள், மூத்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். 

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிச்சாண்டி திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த தலைவரும் , 9 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 6 முறை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் அங்கம் வகித்துள்ளார். நாளைய தினம் காலை 10 மணிக்கு தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரின் மறுநாளான 12ம் தேதி காலை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். சபாநாயகராக ராதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு மற்றும் துணை சபாநாயகராக கு. பிச்சாண்டி ஒருமனதாக தேர்ந்தெடுக்க படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!