தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவி ஏற்பு ... முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

Published : May 10, 2021, 11:51 AM IST
தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவி ஏற்பு ... முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

சுருக்கம்

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சர்கள் கடந்த 7ம் தேதிபதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில், நாளை தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்கவுள்ளனர். மறுநாள் 12-ம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இந்நிலையில், கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டியை தற்காலிக சபாநாயகராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார்.

இதனையடுத்து, தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

இந்த பதவியேற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, பொன்முடி உள்ளிட்டோர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டிக்கு ஆளுநர் மற்றும் முதல்வர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!