நிதியமைச்சர் போல் நடந்துக்கொள்ளவில்லை… நிர்மலா சீதாராமனை விளாசிய கார்த்திக் சிதம்பரம்!!

By Narendran S  |  First Published Sep 4, 2022, 8:29 PM IST

நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் போல் நடந்துக்கொள்ளவில்லை என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். 


நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் போல் நடந்துக்கொள்ளவில்லை என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சி போன்ற தேசிய கட்சி மக்களை சந்திப்பது நல்ல விஷயம். ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்வது காங்கிரஸ் கட்சிக்கு வலுசேர்க்கும். கட்சிக்கு பலம், பொது மக்கள், தொண்டர்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கட்சி தலைமைக்கு கிடைக்கும். கட்சியின் நிலைப்பாட்டை மக்கள் தெரிந்து கொள்ள முடியும், பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் என்ன பாதிப்புகள் சமுதாயத்திற்கு வந்துள்ளது என்பதனை எடுத்த சொல்ல காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நல்ல வாய்ப்பு. நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் போல் நடந்துக்கொள்ளவில்லை. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெலுங்கு பேசுவதை இன்று பார்த்து இருக்கிறேன்.

இதையும் படிங்க: தமிழகத்துக்கு என்.எல்.சி நிறுவனம் தேவை இல்லை… அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!!

Tap to resize

Latest Videos

பிரதமர் மோடி சொந்த பணத்தில் ரேஷன் அரிசி கொடுக்கிற மாதிரி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். நிதி அமைச்சர் போன்று அவர் நடந்து கொள்ளவில்லை. இது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்தார். முன்னதாக தெலுங்கானா காமெரெட்டி மாவட்டத்தின் பீர்கூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமான் தீடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அம்மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பாட்டீலிடம் மக்களுக்கு ரேஷன் கடைகளில் எவ்வளவு அரிசி வழங்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார். இதில், மத்திய, மாநில அரசுகளின் பங்கு என்னவென்று கேட்டார். இந்த கேள்விக்கு தவறான பதில் கூறியதால் அரை மணி நேரத்தில் விவரத்தைக் கண்டறிந்து தெரிவிக்கும்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: இனி எல்லாமே எடப்பாடி வசம்.. சசிகலா சொன்ன அந்த வார்த்தை - எஸ்கேப் ஆன ஆர்.பி உதயகுமார்!

மேலும் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லை. நீங்கள் ஒரு மாவட்ட ஆட்சியராக, பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைப்பதை உறுதி செய்ய வேண்டும். அந்த படத்தை யாரும் அகற்றக்கூடாது, கிழிக்கக் கூடாது. சேதப்படுத்தக் கூடாது. மக்களுக்கும் அனைத்தையும் இலவசமாக அளிக்கும் பிரதமரின் ஒரு போட்டோ வைப்பதற்கு எதிர்ப்பது ஏன்? ஏன் பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் போல் நடந்துக்கொள்ளவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.  

click me!